பிஎம் கேர்ஸ் நிதி யாருடைய நிதி என்றும் ஒன்றிய அரசு விளக்கம் தருமா என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, இன்று(அக்டோபர் 7), தனது முகநூல் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ள சு.வெங்கடேசன், “1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆக்சிஜன் கொள்கலன்களை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திறந்து வைத்தேன் . உடன் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் இஆப , மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் இஆப , மருத்துவமனை டீன் அ.ரத்தினவேல் & மருத்துவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.” என்று தெரிவித்துள்ளார்.
“திறந்து வைத்த கொள்கலன்களில் பிஎம் கேர் நிதி கீழே ஒன்றிய அரசு என்றிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உச்சநீதிமன்றத்தில் பிஎம் கேருக்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஒன்றிய அரசு கூறியிருந்தது. திறந்துவைத்த எங்களுக்கும் குழப்பமாகவே இருக்கிறது.” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், “இது யாருடைய நிதி? விளக்கம் தருமா ஒன்றிய அரசு?” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.