Aran Sei

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை கல்லூரிக்குள் அனுமதிக்க மறுத்த நிர்வாகம் – உருது, அரபு மொழி பேச தடை விதித்ததாக மாணவிகள் புகார்

ர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில் ஹிஜாப் அணிந்ததற்காக 6 இசுலாமிய மாணவிகளை வகுப்புகளுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆடை பிரச்சினையுடன் உருது, அரபு மற்றும் பேரி மொழிகளில் பேசுவதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இத்தகைய கட்டுப்பாடுகளின் விளைவாக, ஜனவரி 1 தேதியிலிருந்து மாணவிகள் வகுப்பறைக்கு வெளியே தொடர்ந்து 3 நாட்களாக ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.
இந்த பிரச்சினையைப் பற்றி விவாதிப்பதாகக் கூறிய நிர்வாக அதிகாரிகள் மாணவிகளின் பெற்றோரை அழைத்து 4 மணி நேரம் காத்திருக்க வைத்துள்ளனர். பெற்றோர்கள் காத்திருந்த போதிலும் இந்த பிரச்சினையைப் பற்றி அவர்களுடன் விவாதிக்கக் கல்லூரி முதல்வர் ருத்ரா கவுடா மறுத்துவிட்டார் என்று மாணவிகள் கூறியுள்ளனர்.
மாணவர்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த நாட்களுக்கான வருகைப்பதிவு அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இது எங்களின் வருகைப்பதிவில் பிரச்சினையை உருவாக்கலாம் என்று மாணவிகள் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
கல்லூரியின் “சீருடையாக ஹிஜாப் இருக்க வேண்டும்” என்று எந்த விதிமுறைகளும் இல்லை, அதனால் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்படவில்லை. இங்குப் பிடிக்கும் 60 மாணவிகளில் 6 பேர் மட்டுமே ஹிஜாப் அணிந்திருந்ததாகவும், இதனால் வகுப்புகளுக்குச் செல்ல அவர்கள் மட்டும் அனுமதிக்கப்படவில்லை என்றும் உள்ளூர் ஊடகங்களுக்கு ருத்ரா கவுடா தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் அணிந்த மாணவிகளை வகுப்புகளுக்கு அனுமதிக்காவிட்டால் ஆர்ப்பாட்டங்களை நடத்துவோம் என்று சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் உடுப்பி மாவட்ட தலைவர் நசீர் அகமது கூறியுள்ளார்.
Source : TheWire
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை கல்லூரிக்குள் அனுமதிக்க மறுத்த நிர்வாகம் – உருது, அரபு மொழி பேச தடை விதித்ததாக மாணவிகள் புகார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்