Aran Sei

நெறியாளர் துன்புறுத்தியதால் ஆய்வு மாணவர் தற்கொலை முயற்சி – விசாரணைக் குழுவை அமைத்த பல்கலைக்கழக துணை வேந்தர்

பெண் ஆராய்ச்சி மாணவர் தற்கொலைக்கு முயன்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த இரண்டு பேர் கொண்ட விசாரணைக் குழுவை அலிகார் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (ஏஎம்யு) துணைவேந்தர் அமைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அலிகார் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் ஆராய்ச்சியளாராக இருக்கும் நபீலா கனம்,  தனது ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பதற்காக நெறியாளரால் துன்புறுத்தப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மயக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக நபீலா கனம் உட்கொண்டுள்ளார். இதன் காரணமாக, ஆபத்தான நிலையில் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கர்நாடகா: பாடப்புத்தகத்தில் இருந்து பெரியார், பகத்சிங், நாராயண குரு குறித்த பாடங்கள் நீக்கப்படவில்லை – கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

அலிகார் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் உமர் பீர்சாடா தெரிவிக்கையில், பேராசிரியர் மீது ஆய்வு மாணவி கூறிய குற்றச்சாட்டுகளைக் கணக்கில் கொண்டு, துணை வேந்தர் தாரிக் மன்சூர் விசாரணைக் குழுவை அமைத்துள்ளார். மூன்று நாட்களுக்குள் தங்கள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தனது நெறியாளரும் இணை நெறியாளரும் தன்னை துன்புறுத்தியதாக  பாதிக்கப்பட்ட துணை வேந்தருக்கு ஆராய்ச்சியாளர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாஹி இத்கா மசூதியை தூய்மைப்படுத்த அபிஷேகம் செய்ய அனுமதிக்க வேண்டும் – இந்து மகாசபா நீதிமன்றத்தில் மனு

இருநபர் விசாரணைக் குழுவில் புள்ளியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் காசி மசார் அலி, கணிதத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் சுபோஹி கான் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Source: The New Indian Express

Annamalai கு கருத்து சுதந்திரம் பத்தி பேச தகுதியே கிடையாது

நெறியாளர் துன்புறுத்தியதால் ஆய்வு மாணவர் தற்கொலை முயற்சி – விசாரணைக் குழுவை அமைத்த பல்கலைக்கழக துணை வேந்தர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்