திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் இருபது வயது கல்லூரி மாணவி ஒருவர் பூச்சி மருத்து குடித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டிக்கு அருகில் உள்ள வெள்ளத்துக்கோட்டையில் ஆசிரமம் ஒன்றை சாமியார் முனுசாமி நடத்தி வருகிறார். பூஜைகள் மற்றும் மூலிகைக் கலவைகளால் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தி வருவதாக ஆசிரமம் கூறுகிறது.
தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் இளங்கலை கணினி அறிவியல் படித்துக் கொண்டிருக்கும் ஹேமமாலினி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு உடல் நலக்கோளாறுகளுக்காக, அந்த ஆசிரமத்தில் சாமியார் முனுசாமியிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மாணவியின் தற்கொலை குறித்து, அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரமத்தில் முறைகேடு நடந்திருக்கும் என சந்தேகிக்கப்படுவதாக மாணவியின் பெற்றோர் காவல்துரையினரிடம் தெரிவித்துள்ளனர்.
பிப்பிரவரி 15ஆம் தேதி காலை, ஆசிரமத்தில், வாந்தி எடுக்கத் தொடங்கிய ஹேமமாலினியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என சாமியார் முனுசாமியிடம் ஹேமமாலினியின் உறவினர் இந்திராணி கோரியிருக்கிறார்.
சில மணிநேரம் கழித்து மருத்துவமனைக்கு செல்ல ஆட்டோ ஒன்றை முனுசாமி ஏற்பாடு செய்திருக்கிறார். திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்ட ஹேம மாலினி, பூச்சி மருந்து குடித்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி ஹேம மாலினி உயிரிழந்துள்ளதாகவும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு, வயிறு மற்றும் கழுத்து வலி போன்ற பல்வேறு நாட்பட்ட நோய்களின் காரணமாக, ஆசிரமத்தில் ஹேமமாலினியை அவரது பெற்றோர் சேர்த்துள்ளனர். ஆசிரமத்தில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்த ஹேம மாலினி, தனக்கு கல்லூரி இணையவழி வகுப்புகள் தொடங்கிவிட்டதாகக் கூறி, வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்டும், வீட்டிற்கு அனுப்ப முனுசாமி மறுத்ததால், ஹேம மாலினி பல நாட்கள் அங்கேயே தங்க வேண்டி இருந்திருக்கிறது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹேமமாலினிக்கு தோஷம் இருந்ததாகவும், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டுமெனவும் அவரது பெற்றோரிடம் முனுசாமி கூறியுள்ளார். அதனால், இரவு நேர பூஜையிலும் அவள் கட்டாயம் கலந்து கொள்ள வைக்கப்பட்டதாக, அவரது பெற்றோர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டி ஆசிரமத்திற்கு வருகை தரும் பெண்கள் பலர், இரவு நேர பூஜைகளில் பங்கேற்பதற்காக அங்கேயே தங்குகிறார்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
ஹிஜாப் தடை: இந்தியாவுக்கு எதிராக சர்வதேச அளவில் அதிகரிக்கும் கண்டனங்கள்
கல்லூரி மாணவி ஹேமமாலினியின் தற்கொலை சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. சாமியார் முனுசாமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#JusticeForHemamalini என்ற பெயரில் ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி, மாணவி ஹேமமாலினியின் தற்கொலைக்கு நீதி கேட்டு வருகிறார்கள்.
Source: Times of India
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.