கோவையில் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடந்துள்ளது. சட்டவிரோத சோதனைகளை ஏவி ஜனநாயகத்திற்கான எஸ்.டி.பி.ஐ. கட்சியின் குரலை ஒருபோதும் ஒடுக்க முடியாது என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை மாவட்ட அலுவலகத்தில் நேற்று (செப்.13) இரவு, மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் ஒன்றிய பாஜக அரசின் ஏவலின் பேரில் சட்ட நடைமுறைக்கு மாறாக சோதனைகளை மேற்கொண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தது.
ஆபரேஷன் தாமரை: கோவா மாநிலத்தில் உள்ள 11 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 8 பேர் பாஜகவிற்கு தாவ முடிவு
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை மாவட்ட அலுவலகம் என்பது மக்கள் சேவைக்கான மையமாகவே செயல்பட்டு வரும் நிலையில், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில், ஜனநாயகத்திற்கான எஸ்.டி.பி.ஐ. கட்சியின் குரலை ஒடுக்கவும், மக்கள் சேவையை தடுத்து நிறுத்தவும் திட்டமிட்டு வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக சோதனை நடத்திய வருமானவரித்துறை அதிகாரிகள், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட அலுவலத்தில் இருந்து எவ்வித ஆவணங்களையும் கைப்பற்ற முடியாமலேயே திரும்பிச் சென்றனர்.
சமீபத்தில் நடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் தான் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் தனித்து நின்று வெற்றி பெற்றார். அனைத்து தரப்பு மக்களின் செல்வாக்கு கொண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி பல்வேறு எதிர்ப்புகளை மீறி வெற்றிபெற்றது ஒன்றிய பாஜக அரசின் கண்களை அச்சுறுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் இந்த சோதனை. கட்சியின் அன்றாட அலுவல் பயன்பாடுகளை தாண்டி, எஸ்.டி.பி.ஐ. கவுன்சிலருக்கான, மக்கள் நலப்பணிகளுக்கான சேவை மையமாகவும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை மாவட்ட அலுவலகம் செயல்பட்டுவந்தது. அதனை திட்டமிட்டு சீர்குலைக்கவும், மக்களிடம் அவப்பெயரை உருவாக்கவுமே வருமான வரித்துறை சோதனை நடந்தேறியுள்ளது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயல்பாடுகள் எப்போதும் திறந்த புத்தகமாகவே உள்ளன. அதன் செயல்பாடுகளை மக்கள் நன்கறிவார்கள். ஆனாலும், ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சமரசமின்றி எதிர்த்து களமாடும் எஸ்.டி.பி.ஐ. கட்சியை ஒடுக்க வருமானவரித்துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின் ஏஜென்சிகளை ஏவிவிடுகிறது ஒன்றிய பாஜக அரசு. இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளால் ஜனநாயகத்திற்கான எஸ்.டி.பி.ஐ. கட்சியின் குரலை ஒருபோதும் ஒடுக்க முடியாது என்பதை ஒன்றிய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
நேற்றைய சோதனையில் எந்த ஆவணமும் கிடைக்காத நிலையில், கட்சியின் நிர்வாகி ஒருவருக்கு நேரில் ஆஜராக சம்மன் ஒன்றை மட்டும் அளித்துள்ளனர். இந்த சம்மனை அவர்கள் முறையாக அனுப்பியிருந்தாலே எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் நேரடியாக ஆஜராகி அவர்கள் முன்வைக்கும் புகார் குறித்து விளக்கமளித்திருப்பார்கள். ஆனால், திட்டமிட்டு கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே கட்சியின் கோவை மாவட்ட அலுவலகத்தில் சோதனையை வருமான வரித்துறை மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி சட்டரீதியாக எதிர்கொள்ளும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்தியில் பாஜக அரசு அமைந்தது முதற்கொண்டு, தங்களுக்கு எதிரான அரசியல் எதிரிகளையும், தங்களின் கருத்துக்களுக்கு உடன்படாதவர்களையும், தங்களது சித்தாந்தத்துக்கு எதிராக எதிர்ப்புக்குரல் எழுப்புவோரையும் பழிவாங்குவது என்பது பாசிசத்தின் வழக்கமான நடைமுறையாகும். அந்த வகையில் தனது கைப்பாவையாக உள்ள வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அரசு ஏஜென்சிகள் மூலம் இதுபோன்ற சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது ஒன்றிய பாஜக அரசு. சமீபகாலமாக அதிகரித்து வரும் இத்தகைய அடக்குமுறை ஏவல் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும். இல்லாவிட்டால் பாஜக அரசின் பாசிச கரங்கள் நாட்டில் உள்ள ஜனநாயக ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்கிவிடும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Former MP Sasikala Pushpa insulted by Pon Balaganapathy | Gayathri Interview | Sasikala Pushpa | BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.