Aran Sei

ஸ்டெர்லைட்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 4-ம் ஆண்டு நினைவு தினம் – அஞ்சலி செலுத்த சென்ற 50 பேர் கைது

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை நோக்கி அஞ்சலி செலுத்துவதற்காக ஊர்வலமாகச் சென்ற பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது 13 பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்ற நான்காவது ஆண்டு நிறைவை மக்கள் இன்று நினைவு கூர்ந்தனர். இந்த ஊர்வலத்தில் பங்கெடுத்தவர்கள் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிரான முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

2018 ஆம் ஆண்டில், தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையில் செயல்பாடுகள் தங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகத் தெரிவித்து அதற்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டம் தமிழ்நாடு அளவில் மிகப்பரந்த அளவில் ஆதரவை பெற்றது.

‘ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்திற்கு மாற்ற மாட்டோம்; தமிழகத்திலேயே மீண்டும் திறப்போம்’ – வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு

அந்த சமயத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்த பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்தனர். கொல்லப்பட்ட 13 பேரும் பின்னர் நகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் அப்போதைய ஆளும் அதிமுக அரசின் மிகப்பெரும் கரும்புள்ளியாக மாறிப் போனது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக – தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ வேண்டுகோள்

இன்று இந்த போராட்டத்தின் நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஊர்வலமாகச் சென்றவர்களுடன் காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இந்த ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறி இதில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Source : DTnext

ஜாதி பாக்காதீங்கனு சொல்றது தப்பா Gayathri Raghuram ? Jeeva Sagapthan

ஸ்டெர்லைட்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 4-ம் ஆண்டு நினைவு தினம் – அஞ்சலி செலுத்த சென்ற 50 பேர் கைது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்