டெல்லியின் ஜுமா மசூதியின் கீழ் இந்துக் கடவுள்களின் சிலைகள் இருப்பதாக இந்து மகா சபா புகார் அளித்துள்ளது. இவற்றை மீட்டெடுக்கும்படி வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு அச்சபையின் தலைவர் சுவாமி சக்ரபாணி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “இந்தியாவில் உள்ள மசூதிகளைக் கட்டுவதற்காக மொகலாயர்கள் இங்கு உள்ள கோயில்களை இடித்துள்ளனர். ராம ஜென்ம பூமி, கிருஷ்ண ஜென்ம பூமி மற்றும் கியானவாபி ஆகியவை அதற்கு தெளிவான எடுத்துக்காட்டுகள் ஆகும்.
அவுரங்கசீப்பின் இராணுவத்தில் மிக மூத்த தளபதியாக இருந்த கான் ஜஹான் பகதூர், இந்துக்களின் மத வழிபாட்டுத் தளங்களை அழித்துவிட்டு ஜோத்பூர் மற்றும் பிற பகுதிகளிலிருந்து திரும்பியபோது, டெல்லியின் ஜுமா மசூதியின் படிக்கட்டுகளின் கீழ் இந்து கடவுள்களின் சிலைகளை அடக்கம் செய்ய ஒளரங்கசீப் உத்தரவிட்டதாக இந்து மகாசபை கூறியது.
உபி: மதுரா மசூதியில் வீடியோ ஆய்வு நடத்த வேண்டும் – நீதிமன்றத்தில் இந்துக் குழுக்கள் மனுத் தாக்கல்
எனவே, ஜுமா மசூதியின் கீழ் தொல்பொருள் ஆய்வு நடத்தப்பட வேண்டும். இதில் என்ன கிடைக்கிறது என்பது பொதுமக்களின் முன்பாக தெரிந்து விடும். இதை உடனடியாகச் செய்யப்பட வேண்டும்” என சுவாமி சக்ரபாணி அதில் தெரிவித்துள்ளார்.
இந்து மகா சபாவின் தலைவர் சுவாமி சக்ரபாணி இதற்கு முன்பே டெல்லியின் பெயரை இந்திரபிரஸ்தா எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார். அப்போது தான் டெல்லியில் நல்ல மழை பெய்யும் எனவும், இதனால் தலைநகர் குளிர்ந்து நாடு முழுவதும் சுபம் உண்டாகும் எனவும் அவர் அப்போது தெரிவித்திருந்தார்.
டெல்லியை ஆண்ட முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் 1656-இல் கட்டப்பட்டது ஜுமா மசூதி. பழம்பெருமை வாய்ந்த இது, நாட்டின் பெரிய மசூதிகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. கியானவாபி மசூதி, மதுரா ஷாயி ஈத்கா மசூதி, குதுப் மினார் மற்றும் தாஜ்மகாலுக்கு பிறகு இந்த மசூதியை இந்துத்துவாவினர் குறி வைத்துள்ளனர்.
Source : india today
காசி ஆனந்தனின் தியாகத்தை கொச்சை படுத்த முடியாது | Thiruma Speech
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.