நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுகுறித்து விவாதிக்க நிலைக்குழு தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான ரமேஷ் பிதுரி மறுத்துவிட்டதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
விலை உயர்வு தொடர்பாக எதிர்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, மாநில அரசு விதிக்கும் கூடுதல் வரியே காரணம் என அவர் குற்றம்சாட்டியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானியங்கள் தொடர்பாக விவாதிக்க, கூடிய நிலைக்குழு கூட்டத்தில், எதிர்கட்சி உறுப்பினர்கள், பெட்ரோலியத்துறை அதிகாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டு விலையேற்றம் குறித்து நிலைக்குழு தலைவரிடம் கேள்வி எழுப்பினர் எனத் தகவல் தெரிவிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“பெட்ரோல் விலை உயர்வு மோடியின் ராஜதந்திரம்” – பாராட்டிய மத்திய பிரதேச அமைச்சர்
தலைநகர் டெல்லியில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.90 ஐ கடந்து ரூ. 100ஐ தொடும் நிலையில் உள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து இருந்த போதிலும் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து எவ்வாறு உயர்ந்து கொண்டிருக்கிறது என்ற கேள்விக்குப் பதிலளிக்க மறுத்த நிலைக்குழு தலைவர், “பட்ஜெட் விதிமுறைகள்பற்றி விவாதிக்கவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது, விலை உயர்வைப் பற்றித் தனியாகக் கூட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார் என்று தி இந்து கூறியுள்ளது.
விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம் என்றும், மத்திய அரசு காரணம் இல்லை என்றும் தெரிவித்த அவர், “மக்கள்மீதான சுமையைக் குறைக்க மாநில அரசுகள் வரியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஒழுங்குபடுத்த அவற்றை ஜி.எஸ்.டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும், அப்போது தான் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் பல்வேறு விதிகளில் இருந்து சாமானியர்கள காப்பாற்ற முடியும்” என ரமேஷ் பிதுரி கூறியுள்ளார் என்று கூட்டதில் கலந்து கொண்ட உறுப்பினர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வுக்கு முந்தைய ஆட்சியே காரணம் – நரேந்திர மோடி
ஜிஎஸ்டி வரிவிதிப்பால் மாநில அரசுகளின் வருவாய் ஏற்கனவே குறைந்து இருப்பதாகவும், பெட்ரோலையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வந்தால், மாநில அரசுகளின் வருவாயைப் பாதிக்கும் எனக் கூறி, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இந்த யோசனையை எதிர்த்து வருகின்றன.
”விலை உயர்வுபற்றி விவாதம் நடத்த, நிலைக்குழுவின் விவாதப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நிறைவடைந்தவுடன் நாங்கள் அந்த விவாதத்தைக் கூட்டுவோம்” என ரமேஷ் பிதூரி, தி இந்து விடம் தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலையேற்றம்: ’கொரோனாவே காரணம்’ – மத்திய அமைச்சர் விளக்கம்
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 19) நடந்த செய்தியாளர் சந்திப்பில், 2014 ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 108.05 அமெரிக்க டாலராக இருந்தபோது லிட்டருக்கு ரூ.71.51க்கு விற்கப்பட்ட பெட்ரோல், தற்போது கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 63.65 அமெரிக்க டாலராக இருக்கும் நிலையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ90.19 ஆக விற்கப்படுகிறது என்றும், கச்சா எண்ணெய் விலை 41 விழுக்காடு குறைந்திருக்கும் நிலையில், பெட்ரோலின் விலை 26 விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014 ஆம் மோடி அரசு பொறுப்பேற்றதிலிருந்து மத்திய அரசு விதித்திருக்கும் வரி 217 விழுக்காடு வரை அதிகரித்திருப்பதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டி இருக்கிறது என தி இந்து கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.