இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பான உணவை உறுதி செய்யும் பொருட்டு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஊக்குவிப்பதற்காக உணவு பாதுகாப்பு குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
2021-22ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. குஜராத் 2-வது இடம், மகாராஷ்டிரா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும் பணி துவங்கியது: சென்னை மாநகராட்சி தகவல்
சிறிய மாநிலங்கள் பட்டியலில் கோவா முதலிடம், மணிப்பூர் 2வது இடம், சிக்கிம் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் ஜம்மு-காஷ்மீர் முதலிடம், டெல்லி 2-வது இடம், சண்டிகர் 3-வது இடம் பிடித்துள்ளது.
உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா வெளியிட்டார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், வளமான இந்தியா அமைய ஆரோக்கியமான குடிமக்களை கொண்ட இந்தியா உருவாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Source : The Hindu
நாடகமாடும் பாஜக, நடிக்கும் அரேபிய நாடுகள் | Prophet Muhammad
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.