2022 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 10,500க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்துள்ளன. இந்த விவரம் மணி கன்ட்ரோல் மற்றும் பல்வேறு ஊடக ஆய்வுகளில் வெளியாகியுள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களின் நிதிச்சுமையை குறைக்க இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. 2021ஆம் ஆண்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வேகமாக பணிக்கு ஆளெடுத்ததும் அவர்களின் சம்பளத்திற்கு அதிக செலவானதுமே இதற்கு காரணம். இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவுகளில் தான் அதிகம் காணப்படுகிறது.
அரசுத் துறையைப் போலவே தனியார் துறையும் முக்கியமானது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
இன்ஜினியரிங் மற்றும் ப்ராடெக்ட் பிரிவுகளில் இந்த ஆட்குறைப்பு மிகக் குறைவாகவே உள்ளது. ஜூன் 19ஆம் தேதி, குருகிராம் பகுதியைச் சேர்ந்த சிட்டிமால் என்ற ஸ்டார்ட்அப் 191 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் 75 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.தன்னுடைய வர்த்தக மாடலை மாற்றுவதாகவும், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சிட்டி மால் மட்டுமல்லாது இந்த ஆண்டில் 25க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை நிதி பற்றாக்குறை, மறுசீரமைப்பு போன்றவற்றை காரணம் காட்டி இந்த பணி நீக்கம் செய்துள்ளது.குறிப்பாக மீஷோ, கார்ஸ் 24, ஓலா மற்றும் பிளிங்கிட் ஆகிய நிறுவனங்கள் அதிகளவில் ஆள்குறைப்பை மேற்கொண்டுள்ளது.ஓலா 2,100 ஊழியர்களையும், பிளிங்கிட் 1,600 ஊழியர்களையும், கார்ஸ் 24 நிறுவனம் 600 ஊழியர்களையும், மீஷோ 150 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது.
கர்ப்பிணி பெண்களுக்கு பணி நியமனம் மறுப்பது ஏன் – இந்தியன் வங்கிக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ்
இந்தாண்டில் அதிக பாதிப்பை கண்டுள்ளது இந்தியாவின் edtech (கல்வி தொழில்நுட்பம்) ஸ்டார்ட்அப்களே ஆகும். கொரோனா காலத்தில் நேரடி வகுப்புகளை கொண்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் தொழில்நுட்பம் சார்ந்த ஆன்லைன் கல்வி முறைக்கு பலரும் மாறினர். இதையடுத்து இந்த ஸ்டார்ட் நிறுவனங்கள் கொரோனா ஆரம்பத்தில் பெரும் வளர்ச்சி கண்ட நிலையில், ஊரடங்கு முடிந்த நிறுவனம் தற்போது சரிவை கண்டு வருகின்றன.
இதன் காரணமாக அன் அகாடமி, வேதந்து, லின்டோ போன்ற நிறுவனங்கள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. இந்த எடுடெக் கல்வித் துறைகளில் தான் 38 சதவீத பணி நீக்க நடவடிக்கை நடைபெற்றுள்ளது.
Source: moneycontrol
Agnipath திட்டம் ராணுவத்தையே முடக்கிடும் EX Indian Army K Malaiappan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.