டெல்லியில் நாளை (ஆகஸ்ட் 28) முனாவர் ஃபரூக்கின் ‘ஸ்டாண்ட் அப்’ நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நேற்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் டெல்லி காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டது. அதேவேளையில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோராவுக்கு அதே நிகழ்ச்சிக்கு தடை கோரி கடிதம் அனுப்பப்பட்டது.
அதில், ‘பாக்யநகரில் நடந்த முனாவர் ஃபரூக்கி நகைச்சுவை நிகழ்ச்சியில் இந்துக் கடவுளை பகடி செய்து பேசினார். இதனால் அங்கு மத ரீதியான மோதல் ஏற்படும் சூழல் உருவானது. ஆகையால் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்காவிட்டால் விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் அமைப்புகள் நிகழ்விடத்தில் போராட்டம் நடத்தும்’ என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், காவல்துறையினர் இந்நிகழ்ச்சி குறித்து விசாரணை நடத்தியதில் முனாவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சிக்கு அனுமதியளித்தால் அப்பகுதியில் மத ரீதியான மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதாக காவல்துறை இணை ஆணையர் ஓ.பி.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
டெல்லி காவல்துறையின் இந்த முடிவுக்கு திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மௌவா மொய்த்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் முதுகெலும்பில்லாத டெல்லி காவல்துறையை மிரட்டி முனாவர் நிகழ்ச்சியை தடை செய்துள்ளது.எனது வீடு அனைத்துப் பக்கங்களிலும் சுவர்களால் மூடப்பட்டு, எனது வீட்டின் ஜன்னல்கள் அடைக்கப்பட்டு இருப்பதை நான் விரும்பவில்லை என்று மகாத்மா காந்தி கூறியிருந்தார். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் மத நல்லிணக்கம் அவ்வளவு பலவீனமாக இருக்கிறதா என்ன? ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியால் இந்தியாவின் மத நல்லிணக்கம் சிதைந்துவிடுமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Source : the hindu
செருப்பு வீச திட்டமிட்ட அண்ணாமலை | PTR palanivel thiyagarajan அடியில ஆடிப்போன பாஜக | Aransei Roast
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.