Aran Sei

தீஷா ரவி கைது: ‘அரசை விமர்சிப்பவர்களை சர்வாதிகாரமாக அடக்குவது சட்டத்தின் ஆட்சி ஆகாது’ – ஸ்டாலின் விமர்சனம்

ருவநிலை செயல்பாட்டாளர் தீஷா ரவியை டெல்லி காவல்துறை கைது செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், அரசை விமர்சிப்பவர்களை சர்வாதிகார முறையில் அடக்குவது, சட்டத்தின் ஆட்சி ஆகாது என்று கூறியுள்ளார்.

நேற்று (பிப்பிரவரி 14), பெங்களூருவைச் சேர்ந்த 21 வயதான பருவநிலை செயல்பாட்டாளர் தீஷா ரவியை, டெல்லி காவல்துறை கைது செய்தது.

ஸ்வீடனைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க், இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு வழிகாட்டும், “டூல்-கிட்” (தகவல் தொகுப்பு) ஒன்றை பகிர்ந்திருந்தார்.

விவசாயிகள் போராட்டம் – ” கைது செய்யப்பட்ட 21 வயது மாணவி தீஷா ரவிக்கு போலீஸ் காவல் சட்ட விரோதமானது “

கிரெட்டா பகிர்ந்த அந்த ஆவணத்தை உருவாக்கியவர்களில் ஒருவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், தீஷா கைது செய்யப்பட்டுள்ளார். கிரெட்டாவிற்கு அந்த ஆவணத்தை (Toolkit) பகிர்ந்தது தீஷா என்றும் காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

தீஷா ரவி கைது குறித்து, இன்று (பிப்பிரவரி 15) திமுக தலைவர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், “குற்றச்சாட்டுகளைப் புனைந்து தீஷா ரவி கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அரசை விமர்சிப்பவர்களைக் சர்வாதிகார முறையில் அடக்குவது சட்டத்தின் ஆட்சி ஆகாது.” என்று கூறியுள்ளார்.

தீஷா ரவி கைது: ’டெல்லி காவல்துறையின் அசிங்கமான நடவடிக்கை’ – நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்

மேலும், “இதைபோலத் தண்டிக்கும் போக்குகளைக் கைவிட்டு விட்டு, இளைஞர்களிடத்தே எதிர்ப்புக் குரல்களுக்குச் செவிக்கொடுக்க வேண்டும் என்று பாஜக அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘டூல்கிட்’ வழக்கில் தொடர்புடையதாகக் கூறி, மேலும் இரு நபர்களுக்கு எதிராக, பிணையில் வெளிவரமுடியாத வகையில் வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீஷா ரவி கைது: ‘அரசை விமர்சிப்பவர்களை சர்வாதிகாரமாக அடக்குவது சட்டத்தின் ஆட்சி ஆகாது’ – ஸ்டாலின் விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்