”கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் கோட்டை என்று சொல்லி நாட்டை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதில் ஓட்டை விழுந்துவிட்டது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமாக ஆழக் குழிதோண்டிப் புதைப்போம்” என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று (பிப்பிரவரி 19), கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசியுள்ளார்.
கைகளை உயர்த்திப் பிடித்த மோடி: ‘சண்டையை சமாதானம் செய்யவா? ஊழல் கறையை காட்டவா?”
அப்போது, “கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் கோட்டை என்று சொல்லி நாட்டை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதில் ஓட்டை விழுந்துவிட்டது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமாக ஆழக் குழிதோண்டிப் புதைப்போம். மக்கள் பேராதரவுடன் அதை நடத்தி முடிப்போம். இது உறுதி.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“வேலுமணி (உள்ளாட்சிதுறை அமைச்சர்) ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தை இந்த கோவையில் நிறுவி உள்ளார். இதில் அவரது சகோதரர்கள், பினாமிகள் நீங்கலாக யாரும் உள்ளே நுழைய முடியாது. இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் ஆளும்கட்சியைச் சேர்ந்த மற்ற காண்ட்ராக்டர்கள் கூட கோவை மாநகராட்சிக்கு உள்ளேயோ, இந்த மாவட்ட டெண்டர்களுக்கு உள்ளேயோ நுழைய முடியாது. அத்தகைய ஊழல் கோட்டையை உருவாக்கி வைத்துள்ளார்.” என்று ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் – நடவடிக்கை எடுக்க திமுக மனு
வேலுமணிக்கு வேண்டிய ஒரு நிறுவனத்தில் 2011-12 ஆம் ஆண்டு வருவாய் 17 கோடி ரூபாய்தான் இருந்தது என்றும் வேலுமணி அமைச்சர் ஆனபிறகு அந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 3,000 சதவிகிதம் அதிகமாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “டான்சி வழக்கும் இப்படித்தான் ஆரம்பித்தது. ஜெயா பப்ளிகேஷன்ஸ் தொடங்கப்பட்டபோது, ஜெயலலிதா, சசிகலா இருவரும் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்து 1991-92 இல் ஆரம்பித்தனர். அதே ஜெயா பப்ளிகேஷன்ஸ் மூலமாக டான்சி நிறுவனத்தை வாங்கினர். ‘எப்படி அவ்வளவு பணம் ஜெயா பப்ளிகேஷனுக்கு வந்தது’ என்பதுதான் எங்களின் பிரதானக் கேள்வியாக இருந்தது.” என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
’நான் ஏ டீம்; ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு சொல்கிறேன் – கமல்ஹாசன் ஆவேசம்
“எனது வழக்கின் விளைவாக டான்சி நிலத்தை ஜெயலலிதா திருப்பிக் கொடுத்தார். அதே போல, எஸ்.பி.வேலுமணிக்கும் சில நிறுவனங்களுக்குமான தொடர்புகளுக்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. அது (ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கு) போன்ற வழக்கு திமுக அரசு அமைந்ததும் அமைச்சர் வேலுமணி மீது நிச்சயமாகப் பாயும்.” என்று அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.