கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தின் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள மசூதிக்குள் நுழைந்து ஜூன் 4 ஆம் தேதி பூஜை செய்யப்படும் என்று இந்துத்துவாவினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் ஜூன் 3 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதிவரை 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.
எந்த வித ஊர்வலம், அணிவகுப்பு அல்லது யாத்திரை போன்றவை நடைபெறுவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவை ஸ்ரீரங்கப்பட்டினத்தின் தாசில்தார் ஸ்வேதா ரவீந்தரா பிறப்பித்துள்ளார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144-வது பிரிவின்படி, நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவது தடுக்கப்படுகிறது.
ஸ்ரீரங்கப்பட்டண கோட்டையில் அமைந்துள்ள மசூதி, அங்கிருந்த அனுமன் கோயிலை இடித்துக் கட்டப்பட்டது என்று இந்துத்துவ அமைப்புகள் தெரிவிக்கின்றன.
மஸ்ஜித்-இ-ஆலா என்றழைக்கப்படும் இந்த மசூதி, 1782 ஆம் ஆண்டில் திப்பு சுல்தானால் கட்டப்பட்டது என்று அங்கிருக்கும் பாரசீக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதாக இந்திய தொல்லியல் துறை கூறியுள்ளது.
இந்துத்துவ குழுக்களால் அழைப்பு விடுக்கப்பட்ட “ஸ்ரீரங்கப்பட்டினம் சலோ” பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகள் மசூதிக்குள் நுழைந்து பூஜை செய்வதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பிடிவாதமாக உள்ளன. மேலும் “ஸ்ரீரங்கப்பட்டினம் சலோ” பேரணிக்கு ஸ்ரீராம் சேனாவின் தலைவரான பிரமோத் முத்தலிக் அழைப்பு விடுத்துள்ளார்.
கியான்வாபி, மதுரா மசூதிகளை தொடர்ந்து இந்துத்துவாவினர் ஸ்ரீரங்கப்பட்டினம் மசூதி மீது குறிவைத்துள்ளனர்.
Source: The Wire
அடுத்து கைதாக போறது Annamalai தான் | Sundharavalli Interview | KarthikGopinath Arrest | Maridhas BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.