Aran Sei

இலங்கை: அதானிக்கு வழங்கப்பட்ட மின் திட்டம் – எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

Credit: BBC Tamil

லங்கையில் 500 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொழும்பு பம்பலபிட்டி மெஜஸ்டிக் சிட்டி வர்த்தக வளாகத்திற்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தில், இலங்கை வளங்களை வெளிநாடுகளுக்கு வழங்க வேண்டாம் மக்கள் கோஷங்களை எழுப்பினர்.

இலங்கை : மின் திட்டத்தை அதானிக்கு வழங்க மோடி கட்டாயப்படுத்தியதாக கூறிய மின்சார வாரியத் தலைவர் பெர்னாண்டோ ராஜினாமா.

இலங்கை மன்னார் பகுதியில் உள்ள காற்றாலை திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்க கடந்த ஆண்டு அந்நாட்டு அரசு ஒப்புதல் தெரிவித்திருந்தது.

மன்னார் காற்றாலை திட்டத்தை அதானிக்கு வழங்குமாறு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் கொடுத்ததாக இலங்கை மின்சார சபையின் தலைவராக இருந்த எம்.எம்.சி. பெர்டினாண்டோ தெரிவித்திருந்தார்.

மின் திட்டத்தை அதானிக்கு வழங்க அழுத்தம் கொடுத்த மோடி – இலங்கை மின்சார வாரியத் தலைவர் வாக்குமூலம்

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த கருத்தைத் திரும்பப் பெற்ற பெர்டினாண்டோ, பின்னர் இலங்கை மின்சார சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

Source: BBC Tamil

அக்னீபத் திட்டமும்! ஆர்எஸ்எஸ் ராணுவமும்! Peter Alphonse | Agnipath Indian Army | Agnipath Scheme BJP

இலங்கை: அதானிக்கு வழங்கப்பட்ட மின் திட்டம் – எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்