Aran Sei

வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, மதக்கலவரம் ஆகியவற்றில் இலங்கையின் நிலைதான் இந்தியாவிலும் உள்ளது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Credit : The Wire

வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, மதக்கலவரம் போன்றவற்றை ஒப்பிடுகையில் இலங்கையில் இருக்கும் நிலைதான் இந்தியாவிலும் உள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்

இந்தியாவிலும், இலங்கையிலும் வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, மதக்கலவரங்கள் ஆகியவற்றின் 6 வரைபடங்களை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஒப்பீடு செய்துள்ளார்.

இந்த 3 விஷயத்திலும், இலங்கையில் இருக்கும் நிலைதான் இந்தியாவிலும் இருப்பதாக அவர் கூறியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து இந்தியாவிலும், இலங்கையிலும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து 2020-ம் ஆண்டில் உச்சம் அடைந்திருப்பதை முதலாவது வரைபடம் காட்டுகிறது.

அதிகரிக்கும் வேலையின்மை: மறுக்கும் இந்திய அரசு – தரவுகள் கூறும் உண்மை என்ன?

இரு நாட்டிலும் எரிபொருள் விலை கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து 2021-ம் ஆண்டு வரை உயர்ந்துள்ளதை 2-வது வரைபடம் காட்டுகிறது. கடந்த 2020-21-ம் ஆண்டில் இரு நாடுகளிலும், மதக்கலவரம் அதிகரித்துள்ளதை 3-வது வரைபடம் காட்டுகிறது.

மக்களைத் திசை திருப்புவதால், உண்மைகள் மாறாது. இலங்கையின் நிலைதான் இந்தியாவில் உள்ளது என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source : NDTV

காசி ஆனந்தனின் தியாகத்தை கொச்சை படுத்த முடியாது | Thiruma Speech

வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, மதக்கலவரம் ஆகியவற்றில் இலங்கையின் நிலைதான் இந்தியாவிலும் உள்ளது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்