Aran Sei

இலங்கை பிரதமர் ராஜபக்சே ராஜினாமா: ராஜபக்சே வீட்டை கொளுத்திய போராட்டக்காரர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதிபர் மற்றும் பிரதமராக இருக்கும் ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலகக்கோரி மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக தனது பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததை அடுத்து இலங்கையில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. நேற்று (மே 9) இரவு ராஜபக்சேவின் வீட்டை எரித்துப் போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மகிந்த ராஜபக்சே அரசுக்கு எதிராக 3 நாள் பேரணி – இலங்கை எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி அறிவிப்பு

இந்நிலையில், நிட்டம்புவா நகரில் அரசுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த மக்களில் ஒருவரை, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதன் பின்னர் போராட்டக்காரர்கள் அவரை தாக்க நெருங்கிய பொழுது கையிலிருந்த துப்பாக்கி மூலம் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து இலங்கையில் உள்ள 35-க்கும் மேற்பட்ட ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, தீவைப்பு சம்பவங்களும் அரங்கேறியுள்ளதால் இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

Source: Puthiyathalaimurai

Surya Siva திமுகவுக்கு உழைச்ச லட்சணத்த நா சொல்றேன் | Munna Ibrahim

இலங்கை பிரதமர் ராஜபக்சே ராஜினாமா: ராஜபக்சே வீட்டை கொளுத்திய போராட்டக்காரர்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்