இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து அகதிகளாக கணவரால் கைவிடப்பட்ட பெண்ணொருவர் தனது இரண்டு குழந்தைகளுடன், ஆபத்தான முறையில் மூவரும் படகின் உதவியால் தனுஷ்கோடிக்கு வந்தடைந்துள்ளார்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே வருகின்றது. பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக கோரி பொதுமக்கள் வீதியில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடியால் வாழ வழியிழந்து இலங்கையிலிருந்து அகதிகளாக ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வர தொடங்கியுள்ளனர். இவ்வாறு, இதுவரை இலங்கை தமிழர்கள் 39 பேர் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 20), இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டம் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட பெண்ணொருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆபத்தான முறையில், தனுஷ்கோடி கம்பிபாடு பகுதிக்கு வந்து இறங்கி உள்ளனர். இப்படகிற்கு இரண்டு லட்ச ரூபாய் கொடுத்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள கடற்படை காவல்துறை மற்றும் கியூ பிராஞ்ச் காவலர்கள், அவர்களை மீட்டு விசாரணைக்காக தனுஷ்கோடி மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
விசாரணைக்கு பின்னர், அவர்கள் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நன்றி: புதிய தலைமுறை
இளையராஜா, அம்பேத்கர், யுவன், மோடி சர்ச்சை… விளக்கமளிக்கிறார் பேரா. சுந்தரவள்ளி
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.