Aran Sei

‘தகுதிப் போட்டியில் தேர்வாகியும் பெண் என்பதால் புறக்கணிப்பா?’ – வீராங்கனை சமீஹா பர்வீன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

மாற்றுத்திறனாளி வீராங்கனை சமீஹா பர்வீன் வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, விசாரித்து வருகிறது சென்னை உயர் நீதிமன்றம்.

போலாந்து நாட்டில் சர்வதேச நான்காவது தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்திய ஒன்றிய அரசின் விளையாட்டுத் துறை அதிகாரிகளால் அனைத்து திறமைகள் இருந்தும் தான் புறக்கணிக்கப்பட்டதாக கூறி, அதை எதிர்த்து வீராங்கனை சமீஹா பர்வீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

நேற்று (ஆகஸ்ட் 11), இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 12), இவ்வழக்கானது விசாரணைக்கு வந்துள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, தகுதிப் போட்டியில் தேர்வாகியும் பெண் என்பதால் அனுமதி மறுப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாளைக்குள் பதில் அளிக்காவிட்டால் நேரடியாக உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளனர்.

இதுதொடர்பாக, இவ்விவகாரத்தில் வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு உதவி வரும் தன்னார்வலர் அன்சார் மீரானிடம் அரண்செய் பேசியபோது, “ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது. பின் ஏன் அவரை சேர்க்கவில்லை என்று ஆணையத்திடம் நிதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஆனாலும், கூடுதலாக சான்றிதழ்களை மாலைக்குள் சமர்ப்பிக்க நீதிபதி எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். நாளை இறுதி தீர்ப்பு வந்து விடும் என்று நம்புகிறோம்.” என்று தெரிவித்தார்.

‘தகுதிப் போட்டியில் தேர்வாகியும் பெண் என்பதால் புறக்கணிப்பா?’ – வீராங்கனை சமீஹா பர்வீன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்