Aran Sei

நான் என்ற அகந்தையை விட்டொழிக்குமாறு யாராவது பிரதமர் மோடியிடம் சொல்லுங்கள்: சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கருத்து

பிரதமர் நரேந்திர மோடி தான் என்ற அகந்தையை விட்டொழித்தால் நாட்டின் நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் புனே நகரில் நேற்று பாபா சாகேப் அம்பேத்கர் பவனை சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் நேருவின் சமாதிக்கு விரைவில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பக்கூடும்: சஞ்சய் ராவத் கிண்டல்

அதில் “வெற்றிக்கு, புத்தரின் ஒரே ஒரு அறிவுரையை மட்டும் பின்பற்றினால் போதும். அது, நான் என்ற அகந்தையை கைவிடுவது. வாழ்க்கையில் வெற்றி பெற்ற அனைவருமே நான் என்ற அகந்தையை விட்டொழித்தவர்கள் தான். அதை விட்டுவிட்டால் போதும் சமூகத்தில், தேசத்தில் உள்ள பிரச்சினைகள் சரியாகிவிடும். எனவே, நான் என்ற அகந்தையை விட்டொழிக்குமாறு யாராவது மோடியிடம் சொல்லுங்கள்” என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்

முனிசிபல் தேர்தல் பற்றி அவர் பேசும்போது, “சிலர் அனுமன் சாலிசா பாடுவதை முக்கிய வேலையாக செய்கின்றனர். அனுமன் சாலிஸா பாடுவது முக்கியம்தான் ஆனால் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதே அதைவிட முக்கியம். சிவசேனா மக்கள் நலனுக்காக நிறையச் செய்துள்ளது. ஆனால் அதை ஒலிபெருக்கியில் சொல்லவில்லை. ஆனால் இந்த முறை நாங்களும் ஒலிபெருக்கி மூலம் மக்கள் சேவையை எடுத்துரைப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source : NDTV

அடித்த கொள்ளையில் பங்கு வெளிவராத உண்மைகள் I Karikalan Interview

நான் என்ற அகந்தையை விட்டொழிக்குமாறு யாராவது பிரதமர் மோடியிடம் சொல்லுங்கள்: சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்