ஒரு சிலர் தங்களைப் பற்றிய உண்மையான ஆவணப்படம் வெளிவந்ததற்கே பயந்து போய் அதனை தடை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம், மாசிநாயக்கன்பட்டியில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 26,649 பேருக்கு 221.42 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சேலத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து வந்திருக்கிறேன். ஆனால், அமைச்சரான பிறகு, முதல் முறையாக சேலம் வந்து உதவிகள் வழங்குவது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இன்று நமது மாநிலம் அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக நம்பர் ஒன்னாக திகழ்கிறது என்றால் அதற்கு தமிழ்நாடு முதலமைச்சரும், அதிகாரிகளும் தான் காரணம். மிகச் சிறந்த ஆட்சி நடைபெற்று வருவதால், எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய வழியில்லாமல் போய்விட்டது. அதனால் வெற்று விளம்பரத்துக்காக பொய்யான அவதூறுகளை பரப்புகின்றனர். இது போன்ற அவதூறுகளைக் கண்டுகொள்ளத் தேவையில்லை. ஆனால் ஒரு சிலர் தங்களைப் பற்றிய உண்மையான ஆவணப்படம் வெளிவந்ததற்கே பயந்து போய் அதனை தடை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதே போல் சமரசமும் செய்யாமல், அடிமைத்தனமும் இல்லாமல் சிறப்பான சுயமரியாதை உள்ள அனைவருக்கும், அனைத்தும் என்ற கொள்கையுடன் இயங்குவது தான் நம்முடைய ஆட்சி. சிறப்பான திராவிட மாடல் அரசு என்றும் உங்களுக்கு துணை நிற்கும் எனவே போலிகளையும், பொய்யர்களையும், துரோகிகளையும் நம்பி ஏமாறாமல் என்றும் இந்த அரசுக்கு துணை நிற்க வேண்டும்” என்று உதயநிதி கூறியுள்ளார்.
Annamalai turns his back on Erode East Bypolls – Savithri Kannan | Erode Election | Evks Elangovan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.