Aran Sei

“அடுத்த முறை தாக்கும்போது தவறு நடக்காது” – மலாலா யூசுப்பிற்கு மீண்டும் தாலிபன்கள் கொலை மிரட்டல்

பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்-ஐ, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்ய முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த தாலிபன் தீவிரவாதி எசானுல்லாஹ் எஹ்சான், அவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மலாலாவை அடுத்த முறை தாக்கும்போது தவறு எதுவும் நிகழாது எனத் தனது ட்விட்டரில் எஹ்சான் குறிப்பிட்டிருந்த நிலையில், அந்த ட்விட்டர் கணக்கு தற்போது நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.

“மலாலாவை சுட்ட குற்றவாளி எப்படி காவலில் இருந்து தப்பினார்” என்பதை, பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் பிரதமர் ஆகியோரிடம் மலாலாவே கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும், என எஹ்சான் தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

‘பாஜக ஆட்சியில் தமிழ் பேசக்கூடாது; அரசை விமர்சித்தால் தேசவிரோதி பட்டம்’ – ராகுல் காந்தி கண்டனம்

2017 ஆம் ஆண்டுக் கைது செய்யப்பட்டு, பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பின் கண்காணிப்பில், பாதுகாக்கப்பட்ட வீடு என சொல்லப்படும் இடத்தில் அடைக்கப்பட்டிருந்த எஹ்சான்,  2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தப்பினார். எஹ்சானின் கைது, தப்பித்தது இரண்டுமே மர்மமாகவும், சர்ச்சைக்குரியதாகவும் உள்ளது.

ஒன்றிக்கும் மேற்பட்ட கணக்குகள் வைத்திருந்த எஹ்சானின் அனைத்து ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. மிரட்டலுக்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக, உடனடியாக ட்விட்டரை தொடர்புகொண்டு சம்பந்தப்பட்ட கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக, பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர், ராவூப் ஹசன் தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை உறவு – கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து திரிகோணமலை சேமிப்பு டேங்குகள் ஒப்பந்தம் ரத்து

பாகிஸ்தானின் தாலிபன் அல்லது ‘தெரிக்-ஐ-தாலிபன் பாகிஸ்தான்’ அமைப்பின் நீண்ட நாள் உறுப்பினரான எஹ்சான்,  தனது ட்விட்டரில் மலாலாவிடம், “வீட்டிற்கு திரும்பு மலாலா, உன்னிடமும் உனது தந்தையிடமும் தீர்க்க வேண்டிய  கணக்கு ஒன்று இருக்கிறது” என்றும், “இந்த முறை எந்தத் தவறும் நடக்காது” என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மலாலா யூசுப் ”என்னையும், அப்பாவி மக்களையும் தாக்கியவர், தெரிக்-ஐ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முன்னாள் செய்தி தொடர்பாளர் எஹ்சான். இப்போது அவர் சமூக வலைதளங்களில் மீண்டும் மிரட்டல் விடுக்கிறார்.” என்றும், “அவர் எப்படி தப்பித்தார்” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலங்கானா வழக்கறிஞர் தம்பதி வெட்டிக் கொலை – ஆளும் கட்சி தலைவர்களை எதிர்த்தது காரணமா?

2014 ஆம் ஆண்டு, பாகிஸ்தானின் ராணுவ பள்ளியைத் தாக்கி, 5 வயது குழந்தைதகள் உள்ளிட்ட 134 பேரை படுகொலை செய்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் எஹ்சான்.

எஹ்சான் ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில், அவருக்குத் தண்டனை வழங்கப்படவில்லை. அவர் எப்படி பாகிஸ்தானில் இருந்து தப்பித்தார், அவர் தற்போது இருப்பதாக கூறப்படும் துருக்கிக்கு எப்படிச் சென்றார் என்பதற்கு, பாகிஸ்தான் அதிகாரிகள் இதுவரை விளக்கமளிக்கவில்லை.

Sources : AP

“அடுத்த முறை தாக்கும்போது தவறு நடக்காது” – மலாலா யூசுப்பிற்கு மீண்டும் தாலிபன்கள் கொலை மிரட்டல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்