Aran Sei

நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் ஆஜராக முடியாது – அமேசான் நிறுவனம் அறிவிப்பு

‘தரவு பாதுகாப்பு மசோதா’ தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் ஆஜராக முடியாது என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 28ஆம் தேதி ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அமேசான் மறுப்பு தெரிவித்திருப்பது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டுக்குழுவின் தலைவருமான மீனாட்சி லெக்ஹி தெரிவித்துள்ளார்.

“அமேசானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு பரிந்துரைக்க முடியும் என்று கூட்டுக்குழு ஒரு மனதாக கருத்து தெரிவித்துள்ளது” என்று மீனாட்சி தெரிவித்துள்ளார்.

“அக்டோபர் 28ஆம் தேதி கூட்டுக்குழுவின் முன் ஆஜராக முடியாது என்று அமேசான் தெரிவித்துள்ளது. அதன் பிரதிநிதிகள் யாரும் ஆஜராகவில்லை என்றால் அது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் கொள்கை பிரிவு தலைவர் அங்கி தாஸ், தரவு பாதுகாப்பு தொடர்பாக இன்று கூட்டுக்குழுவின் முன்பு ஆஜரானார்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம், கூட்டுக் குழுவின் உறுப்பினர்கள், கடுமையான கேள்விகள் கேட்டதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

பயன்பாட்டாளர்களின் தரவுகளை கொண்டு, விளம்பர தாரர்களின் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படும் வகையில் எந்த அனுமானங்களையும் பெறக் கூடாது என்று, கூட்டுக் குழுவின் உறுப்பினர் ஒருவர் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், டிவிட்டர் நிறுவனம் அக்டோபர் 28 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்றும், அதைத்தொடர்ந்து கூகுள் மற்றும் பேடிஎம் நிறுனங்கள் 29ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் நாடாளுமன்ற கூட்டுக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் ஆஜராக முடியாது – அமேசான் நிறுவனம் அறிவிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்