Aran Sei

ஃபேஸ்புக்கில் புதிய அம்சம் – இனி தவறான தகவலுக்கு இடமில்லை

Image Credits: The Economic Times

ஃபேஸ்புக் நிறுவனம், அதன் தளத்தில் பகிரப்படும் தவறான தகவல்களைக் கண்டறிவதற்காகப் புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆப்ஜெக்ட் டிஎன்ஏ (Object DNA) எனப்படும் ஒருவகை கணினி தொழில்நுட்பம் உட்பட பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இது தவறான தகவல்களைக் கண்டறியும்.

இதை பற்றிய விவரங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ‘அன் அனாலிசிஸ் ஆப் ஆப்ஜெக்ட் எம்பேடிங்ஸ் ஃபார் இமேஜ் ரெட்ரிவள்’ (An Analysis of Object Embeddings for Image Retrieval) எனும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வதற்காக முழுப் படத்தையும் பார்க்கும் வழக்கமான கணினி தொழில்நுட்ப அம்சங்களை போலன்றி, ஆப்ஜெக்ட் டிஎன்ஏ படத்தில் உள்ள குறிப்பிட்ட முக்கிய தகவல்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. தேவையற்ற தகவல்களை புறம்தள்ளிவிடுகின்றது.

திட்டமிட்டு வெறுப்பை பரப்பும் ஃபேஸ்புக் நிறுவனம் – முன்னாள் ஊழியர் வாக்குமூலம்

“இதன் மூலம் முன்கூட்டியே ‘தவறானது’ என்று குறிப்பிடப்பட்ட படத்தின் மறுஉருவாக்கத்தையோ துண்டுகளையோ பகிர்தலும் கூட கண்டறிய முடியும். அசல் படமும் முறுஉருவாக்கம் செய்யப்பட்ட நகலும் மிகவும் வித்தியாசமாக இருந்தாலும் கூட ஆப்ஜெக்ட் டிஎன்ஏ-வை பயன்படுத்தி கண்டறியலாம்” என்று ஃபேஸ்புக் ஒரு வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ‘லேசர்’ மொழி அம்சத்தை பயன்படுத்தி வாக்கியங்களின் சொற்பொருள் ஒற்றுமையை பரிசீலிக்கின்றது. இது உரை அல்லது படங்கள் அல்லது இரண்டையும் கொண்ட உள்ளடக்கத்திற்காக வேலை செய்கிறது. இது எழுத்து மற்றும் படம் வடிவத்தில் உள்ள கருத்தில் ஒற்றுமை உள்ளதா என்பதை கண்டறிய உதவும்.

இந்த ஆண்டு, மார்ச் 1 முதல் அமெரிக்க தேர்தல் நாள் வரை, அந்நாட்டில் உள்ள மக்களால் பார்க்கப்பட்ட 180 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகளை குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் எச்சரித்துள்ளது. இப்பதிவுகள் போலியானது என்று மூன்றாம் தரப்பு உண்மை அறியும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எனவே, இப்போது அறிமுகம் ஆகியிருக்கும் புதிய அம்சத்தின் மூலம் முன்கூட்டியே போலியென்று குறிப்பிடப்பட்ட தகவல்களை சுலபமாக அடையாளம் கண்டுவிடலாம். காணொளி வடிவத்திலான தவறான தகவல்களை கண்டறியும் அம்சத்தையும் அறிமுகம்படுத்தியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக்கில் புதிய அம்சம் – இனி தவறான தகவலுக்கு இடமில்லை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்