சமூக வலைதளங்கள் “கட்டுப்படுத்த முடியாதவை” என்றும் சமூகத்தை சீர்குலைக்கக் கூடிய வலிமை பெற்றவை என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில், சமூக வலைதளத்தின் பங்கு ஏதேனும் இருந்ததா என்பது குறித்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, டெல்லி சட்டமன்றத்தின் “அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான சட்டமன்ற குழு” ஃபேஸ் புக் நிறுவனத்தின் இந்திய தலைவர் அஜித் மோகனுக்கு சம்மன் அனுப்பியது.
சர்ச்சைக்குரிய கருத்துகள் – கங்கனா ரணாவத்தின் பதிவுகளை நீக்கிய டிவிட்டர் நிறுவனம்
அந்த சம்மனை ரத்து செய்யக் கோரி, அஜித் மோகன் உச்சநீதிமனறத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு நேற்று (பிப்ரவரி 17) உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சை கிஷன் கவுல் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, டெல்லி அரசின் “அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான சட்டமன்ற குழு”, சமூக வலைளதங்களை ஒழுங்கு படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க முடியாது என்றும், இது தேசிய பிரச்சனை, ஆகவே இதற்கான தீர்வு நாடளுமன்றத்திலிருந்து வர வேண்டும் என்றும் கூறியதாக தி இந்து தெரிவித்துள்ளது.
டிவிட்டர் கணக்குகளை முடக்கும் கோரிக்கை – மத்திய அரசுடன் டிவிட்டர் நிறுவனம் பேச்சுவார்த்தை
சமூக வலைதளங்கள் தொடர்பாக ஏற்கனவே நாடாளுமன்றம், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக கூறிய துஷார் மேத்தா, சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தும் போக்கு தற்போது உலகம் முழுவதும் உணரப்பட்டுள்ளது என்றும் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஒரு பிரச்சனை என்றவுடன், மாநில அரசின் சட்டமன்ற குழுவிற்கு அதிகாரம் கொடுக்க வேண்டியது அதற்கு பதிலாக அமையாது. அது தேசிய அளவில், நாடாளுமன்றத்தால் எதிர்கொள்ளப்பட வேண்டும்” என்றும் துஷார் தெரிவித்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.