Aran Sei

பாஜகவுக்கு நன்கொடை அளித்ததாக வந்த குறுஞ்செய்தி: ‘எந்த நன்கொடையும் நான் செலுத்தவில்லை, இது என்ன மோசடி?’ என பதிவிட்ட ஊடக ஆலோசகர்

நொய்டாவைச் சேர்ந்த ஊடக ஆலோசகர் விஷாக் ரதிக்கு  மே 7 ஆம் தேதி JX-NMAPPS என்கிற எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், பாஜகவுக்கு அவர் 5 ரூபாய் நன்கொடை அளித்ததாக செய்தி வந்துள்ளது.

நன்கொடை ஏதும் செய்யவில்லை என்று ரதி தெரிவித்துள்ளார். உலகிலேயே மிகப் பெரிய கட்சி என்று கூறிக்கொள்ளும் அரசியல் கட்சி பெரிய நன்கொடைகள் மூலம் அதிகப் பணத்தைப் பெறும் அரசியல் கட்சி, நிதி பெற்றதற்கான ஒப்புகைச் சீட்டை எனக்கு அனுப்பியது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

’நீங்கள் பாஜகவுக்கு 5 ரூபாய் நன்கொடை அளித்தது வெற்றிகரமானது’ என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர். அதை அனுப்பியவரின் மின்னஞ்சலில் பிரதமர் நரேந்திரமோடியின் படம் போட்டிருந்தது.

2020-21 இல் தேர்தல் அறக்கட்டளைகள் ரூ.258.49 கோடி நிதியை அரசியல் கட்சிகளுக்கு கொடுத்துள்ளன: ரூ.212.05 கோடி நிதி பெற்று பாஜக முதலிடம்

தி வயரிடம் பேசிய அவர், “5 ரூபாய் நன்கொடை பெற்றதாக குறுஞ்செய்தி வந்த போது அதிர்ச்சி அடைந்தேன். என்னுடைய அலைப்பேசி எண்ணையும் இணைய முகவரியையும் எங்கிருந்து பெற்றார்கள் என்று எண்ணும்போது இன்னும் அதிர்ச்சி அடைந்தேன். என்னுடைய வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதா என்று சரிபார்த்தேன். ஆனால், அப்படி ஏதும் நிகழவில்லை” நன்கொடைக்கான ரசீது பாஜகவின் தலைமை  அலுவலகத்திலிருந்து வந்திருந்தது என்று கூறியுள்ளார்.

பாஜக அதிகார்வப்பூர்வ இணையப்பக்கத்தை பார்க்கும் போது கட்சிக்கு நன்கொடை அளிப்பது அல்லது உறுப்பினர் சேர்க்கை செய்ய ஆர்வமுள்ள நபர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை ​​பதிவு செய்யப்படும். பின்னர் பதிவு செய்யப்பட்டவருக்கு கடவுச்சொல் (OTP) வரும் பின்னர்தான் பரிவர்த்தனைகள் நடக்கும். தனக்கு எந்த கடவுச்சொல்லும் வரவில்லை என்று ரதி தெரிவித்துள்ளார்.

பின்னர், பாஜக அலுவலகத்திற்கு சென்று நான் நன்கொடை அளிக்க விரும்புகிறேன் என்று சொன்னவுடன், அந்த ஊழியர் முன்னர் குறிப்பிட்ட அதே இணையதள பக்கத்திற்கு சென்று அதே நன்கொடை பக்கத்தைத் திறந்து எனது தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிந்தார். நன்கொடை பக்கத்தை நிரப்பிச் செயல்முறையை முடிக்கும்போது எனக்கு வந்த கடவுச் சொல்லைக் கேட்டார். நான் சொன்னவுடன் AX-BJPMEM என்கிற முகவரியிலிருந்து 10-05-2022 அன்று நீங்கள் பாஜகவுக்கு அளித்த நன்கொடை வெற்றிகரமாக வந்துள்ளது. என்று செய்தி வந்தது.

4,847 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் பணக்கார கட்சியாக மாறிய பாஜக – ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்

இந்த ஆன்லைன் செயல்பாட்டின் மூலம் கட்சிக்குக் கிடைத்த நன்கொடைகளைப் பார்த்தால், இவற்றில் பெரும்பாலானவை ரூ. 100 என்றும், மிகக் குறைவானவை ரூ. 500-ஐத் தாண்டியிருப்பதும் தெரியவந்தது. பாஜக அலுவலக ஊழியர் ரொக்கமாகச் பணம் செலுத்த எந்த வழிமுறையும் இல்லை என்று கூறினார். கட்சி உறுப்பினர் சேர்க்கையின்றி ஒருவர் நன்கொடை அளிக்கலாம், அதற்கான குறைந்தபட்ச பதிவு மற்றும் நன்கொடைத் தொகை ரூபாய் 105 ஆகும் என்று அலுவலர் கூறியதாக ரதி தெரிவித்துள்ளார்.

பணம் உண்மையில் பாஜக கட்சிக்குச் சென்றதா என்பதை உறுதிப்படுத்த வழி இல்லை. இணையதளத்தின் முகப்புப் பக்கத்தைப் பார்க்கும்போது இந்த குறைந்த நன்கொடைகள் பாஜகவுக்குத்தான் போகிறது என்று நிச்சயம் சொல்ல முடியும். புதிய இந்தியாவைக் கட்டியெழுப்ப பிரதமர் மோடிக்கு ஆதரவு தாருங்கள். இந்த நன்கொடைகள் ரூ. 5 முதல் 1,000 வரை இருக்கலாம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது.

Source: the wire

இலங்கையில் நடப்பது இது தான்? | Tu Senan Interview | Mahinda Rajapaksa House Attack

பாஜகவுக்கு நன்கொடை அளித்ததாக வந்த குறுஞ்செய்தி: ‘எந்த நன்கொடையும் நான் செலுத்தவில்லை, இது என்ன மோசடி?’ என பதிவிட்ட ஊடக ஆலோசகர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்