Aran Sei

சந்திக்க இருக்கும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் – அடுத்தக்கட்ட திட்டம் குறித்து ஆலோசனை

விவசாய சட்டங்களை நீக்கக் கோரி நடைபெற்ற விவசாயிகளின் ஓர் ஆண்டு கால போராட்டம் நிறைவடைந்ததற்கு பிறகு, போராடிய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் தலைவர்கள் முதல் முறையாக இந்த வார இறுதியில் சந்திக்க உள்ளனர்.

“விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையைக் கண்டறிய ஒரு குழுவை அமைப்பது மற்றும் டெல்லி உட்பட அனைத்து மாநிலங்களிலும் போராடிய விவசாயிகள்மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது தொடர்பாக ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இவற்றை செய்வதாக ஒன்றிய அரசு முன்னர் உத்தரவாதம் அளித்திருந்தது” என்று விவசாயிகள் தலைவர்கள் கூறியுள்ளனர்.

பிரதமர் வந்ததே விவசாயிகளுக்கு தெரியாது. பிரதமர் அருகில் இருந்தவர்கள் பாஜக தொண்டர்களே – சம்யுக்தா கிசான் மோர்ச்சா விளக்கம்

“நாங்கள் எங்களுடைய ஓர் ஆண்டுகால டெல்லி போராட்டத்தை முடித்துக்கொண்டு, ஒன்றிய அரசின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை ஒத்திவைத்தோம். ஆனால் இதுவரை, குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து குழு அமைப்பதாக அளித்த வாக்குறுதி தொடர்பாக, அரசு தரப்பிலிருந்து எந்த முன்னேற்றமும் இல்லை” என்று பாரதிய கிசான் யூனியனின் பொதுச் செயலாளர் யுத்வீர் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் விவசாயிகள் தலைவர்கள் ஜனவரி 15 அன்று கூடி, ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மதிப்பாய்ந்து, எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source: The Hindu

சந்திக்க இருக்கும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் – அடுத்தக்கட்ட திட்டம் குறித்து ஆலோசனை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்