Aran Sei

வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசு – ஜன.31 ‘துரோக தினம்’ கடைப்பிடிக்க விவசாயிகள் முடிவு

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதைக் கண்டித்து ஜனவரி 31ஆம் தேதி நாடு தழுவியளவில் ‘துரோக தினம்’ கடைப்பிடிக்க விவசாய சட்டங்களைச் நீக்கக் கோரி போராடிய விவசாயிகளின் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா முடிவு செய்துள்ளது.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பங்கேற்கும் சக விவசாயிகளின் சங்கங்களிடமிருந்து விலகி இருக்கவும் மோர்ச்சா முடிவு செய்துள்ளது.

நேற்று(ஜனவரி 15) மாலை, டெல்லி சிங்கு எல்லையில் நடந்த சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் கூட்டத்தில், டிசம்பர் 9 தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்ட எந்த வாக்குறுதியையும் ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை என்று தனது வருத்தத்தையும் கோபத்தையும் விவசாயிகள் சங்கங்கள் வெளிப்படுத்தியுள்ளன. அவ்வாக்குறுதிகளின் அடிப்படையில்தான் விவசாயிகளின் போராட்டம் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது.

விவசாயிகளுக்கு அநீதி விளைவித்தால் மீண்டும் போராட்டம் தொடரும் – ஒன்றிய அரசை எச்சரித்த மேகாலயா ஆளுநர்

“விவசாயிகளின் போராட்டத்தின் போது விவசாயிகள்மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறுவதாக வாக்குறுதி அளித்தும் மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக ஹரியானா அரசு சில ஆவணங்களை மட்டுமே தயார் செய்துள்ளது” என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரபிரதேச அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இழப்பீட்டுத் தொகை குறித்து ஹரியானா அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘விவசாய சட்டங்கள் மீண்டும் அமல் படுத்தப்படும்’ – ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

விவசாய விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவதாக ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதி குறித்து குறிப்பிடுகையில், “இது தொடர்பாக ஒன்றிய அரசு குழு அமைப்பதாக தெரிவித்திருந்தது. ஆனாலும், இதுவரை அக்குழு குறித்து எந்த அறிவுப்பும் வெளியிடவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டம் குறித்து பேசியுள்ள சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் மூத்த தலைவரான தர்ஷன் பால், “ஒன்றிய அரசின் இந்த துரோகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் ஜனவரி 31ஆம் தேதி துரோக தினம் கடைபிடிக்க மோர்ச்சா முடிவு செய்துள்ளது. மேலும், மாவட்ட அளவில் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

Source: New Indian Express

வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசு – ஜன.31 ‘துரோக தினம்’ கடைப்பிடிக்க விவசாயிகள் முடிவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்