பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக உதைப்பூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை, ஆக்ராவைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியில் படிக்கும் 3 மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
துபாயில் நடைபெற்று வரும் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில், கடந்த ஞாயிறுகிழமை இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் பாகிஸ்தான் அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனைக் கொண்டாடும் விதமாக பாகிஸ்தான் அணிக்கு ஆதரவான பதிவுகளை பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
ஆக்ரா, பரேலி, பதாவுன் மற்றும் சீதாபூர் மாவட்டங்களில் ஐந்து வழக்குகளில் ஏழு பேர்மீது புகார் பதியப்பட்டுள்ளது. இதில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உத்திரபிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திரிபுரா வன்முறை: பாஜக அல்லாத கட்சிகளின் மெளனம் வேதனையளிக்கிறது – எஸ்.டி.பி.ஐ.
ஜம்மு காஷ்மீரில் இரண்டு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்களை தெரிவித்தததற்காக கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்ரீநகர் மாவட்டம் கரண் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சவுராவில் எஸ்.சி.ஐ.எம்.எஸ் கல்லூரி விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களில் சிலர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
திரிபுரா: வன்முறையில் முடிந்த விஷ்வ இந்து பரிஷத் பேரணி- கொளுத்தப்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகள்
கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை மாணவர்கள் கொண்டாடிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து வழக்கு பதியப்பட்டது.
பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்ததற்காக உதய்பூரில் நீர்ஜா மோடி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை நபீசா அட்டாரியை பணியை விட்டு நீக்கிய நிலையில், அவர்மீது இந்திய தண்டனைச் சட்டம் 153வது பிரிவு (தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்படுதல்) கீழ் வழக்கு பதியப்பட்டிருப்பதாக அம்பாலா மாதா காவல் நிலையைத்தின் நிலைய அதிகாரி நர்பத் சிங் தெரிவித்துள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.