கர்நாடகாவில் ஹிஜாப் தடைக்கு எதிராக ஹைதராபாத்தில் இஸ்லாமிய பெண்கள் அமைப்பினர் மௌன போராட்டம் நடத்தியுள்ளனர்.
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் வகுப்புகளுக்குள் அனுமதிக்காததும், ஹிஜாபை கழற்றினால் தான் உள்ளே அனுமதிப்போம் என்று கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஹிஜாப் விவகாரம் தொடர்பான விசாரணை முடியும் வரை ஹிஜாபுக்கு தடை விதிக்க கூடாது என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நாங்கள் முறையிடுகிறோம்” என்று ஷரியா மற்றும் முஸ்லீம் பெண்கள் சங்கத்தின் தலைவி டாக்டர் அஸ்மா ஜெஹ்ரா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற தடையை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளுக்கு இடைக்கால உத்தரவிட்டுள்ள கர்நாடக உயர்நீதிமன்றம், வகுப்பறைகளுக்கு மாணவர்கள் ஹிஜாப், காவி துண்டு உள்ளிட்ட மத அடையாளங்களை அணிந்து வருவதற்குத் தடை விதித்துள்ளது.
Source : DTnext
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.