Aran Sei

பாஜக பிரமுகருக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் ட்விட்டரில் நடந்த வார்த்தைப் போர் – வென்றது யார் ?

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, டூல்கிட் (வழிகாட்டு ஆவணம்) வழியாக சர்வதேச சதி திட்டம் தீட்டியதாக, பெங்களுருவைச் சேர்ந்த, 22 வயது மாணவி தீஷா ரவி தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்த நடிகர் சித்தார்த், ”நீங்கள் நண்பர்களுடன் ஒரு திரைப்படத்தைப் பார்க்க விரும்பினால், அவர்கள் அனைவருக்கும் எந்தத் திரைப்படம், எந்த நேரம், எங்குச் செல்வது என்று செய்தி அனுப்புகிறீர்கள். இதை  டூல்கிட் என்று கூட அழைக்கலாம்” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், ”போராட்டக்காரர்கள் தேவாலயத்தில் கூடினால், கிறிஸ்துவ மிஷனரிகள், பிரியாணி சாப்பிட்டால் ஜிகாதிகள், தலைப்பாகை அணிந்திருந்தால் காலிஸ்தானியர்கள், அவர்கள் தாமாக ஒன்றிணைந்தால் டூல் கிட் (டூல்கிட் சர்வதேச சதி). ஆனால், நாம் இந்தப் பாசிச அரசாங்கத்தை எதிர்த்து எதுவும் பேசக் கூடாது.” என்றும் பதிவட்டிருந்தார்.

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினரான கருணா கோபால், தீஷா ரவி தொடர்பான நடிகர் சித்தார்த்தின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து, “யார் இவர்? பள்ளி படிப்பையாவது முடித்தவரா? மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் ஆதாரமற்ற பல செய்திகளை இவர் தொடர்ந்து எழுதுகிறார்” என ட்விட்டரில் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்துள்ள நடிகர் சித்தார்த், ”இந்தப் பெண் (கருணா கோபால்), 2009 ஆம் ஆண்டு இந்திய மேலாண்மை பள்ளியில் (Indian school of business), அவருடைய குழு நடத்திய விவாதத்தில் கலந்து கொள்ள கூறி, என்னை பல நாட்களாக நச்சரித்துக் கொண்டிருந்தார். அந்த அமர்வில் நான் கலந்து கொண்டேன். அப்போது முதுகலை பட்டதாரியான நான், என் மனதில் உள்ளதை பேசினேன். இந்த பெண் தன்னுடைய நேர்மையையும், நினைவுகளையும் தன்னுடைய எஜமானரிடம் விற்றுவிட்டு, தற்போது மோடியின் பொய்யையும் பரப்பி கொண்டிருக்கிறார்” என பதிவிட்டுள்ளார்.

என் டிவிட்டர் பதிவுகள் மறைக்கப்படுகின்றன – டிவிட்டர் நிறுவனம் மீது நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு

நடிகர் சித்தார்த்தினுடைய இந்த ட்விட்டுக்கு பதிலளித்த கருணா கோபால் “என்னுடைய தலைமையில் தான் இந்திய மேலாண்மை பள்ளியில் அந்த அமர்வு நடைபெற்றது. அந்த அமர்வில் கலந்துகொள்ள, உங்களை பள்ளியின் தரப்பிலிருந்து யாராவது அழைத்திருக்கலாம். உலக பொருளாதார மன்றத்தைச் சேர்ந்த இருவரையும், இளம் தலைவர்களை மட்டும்தான் நான் அழைத்திருந்தேன். அந்த நிகழ்வில் உங்களை பங்குகொள்ள வைத்ததே மிகப் பெரிய தவறு என்பதை தற்போது உணர்கிறேன், நான் உங்களைப் பற்றி ஒழுங்காக விசாரித்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

‘யார் சொல்லிக் கொடுத்ததை ஒப்பித்துக் கொண்டிருக்கிறீர்கள்’ – பிரபலங்களுக்கு சித்தார்த் கேள்வி

இதற்கு பதிலளித்துள்ள சித்தார்த், ”என்னுடைய ஜிமெயில் கணக்கின் இன்பாக்ஸில் பல ஆண்டுகளாக உங்களிடமிருந்து மின்னஞ்சல்களும், சந்திப்பதற்கான கோரிக்கைகளும் வந்துள்ளது. அவற்றை நான் பொது தளத்தில் பகிர நீங்கள் ஆசைப்படுகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

தீஷா ரவி கைது: ’டெல்லி காவல்துறையின் அசிங்கமான நடவடிக்கை’ – நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்

அதற்கு பதிலளித்துள்ள கருணா கோபால், “எனது பெயரில் தான் என்னுடைய அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல்கள் அனுப்பப்படும். நிச்சயமாக இது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  தொழில் வல்லுநர்கள் மட்டுமே இது போன்று செய்கிறார்கள். இதை அறிந்து கொள்ளும் அளவுக்கு, நீங்கள் ஒரு நாள் வளருவீர்கள் என்று நம்புகிறேன்!” என தெரிவித்துள்ளார்.

போராட்டத்தை பற்றி பாடம் எடுக்கும் வன்முறையாளர்கள்: நடிகர் சித்தார்த் கண்டனம்

இதற்கு பதிலளித்துள்ள நடிகர் சித்தார்த், கருணா கோபால் தனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சல் ஒன்றை பகிர்ந்து ”வெற்றி” (Drops mic) என்று பதிவிட்டுள்ளார்.

அந்த மின்னஞ்சலில், ”இந்திய மேலாண்மை பள்ளியில் நாம் சந்தித்து கொண்டது உங்களுக்கு நினைவிருக்கும் என நம்புருகிறேன். என்னுடைய மகனின் ஒவிய கண்காட்சி நடக்கிறது. அதை நீங்கள் தொடங்கி வைத்து அவனை வாழ்த்தினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்” என்று கருணா கோபால் கூறியுள்ளார்.

சித்தார்த் ஆதாரத்தை வெளியிட்டதால் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டுள்ள கருணா கோபால், “:உங்களைப் பின்தொடர்பவர்கள் அப்பாவிகள் போல தெரிகிறார்கள். அவர்களை உங்கள் இடதுசாரி சித்தாந்தத்திற்குள் இழுக்க வேண்டாம்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு, சித்தார்த், ”நீங்கள் ஆரம்பித்ததை நான் முடித்து வைத்திருக்கிறேன்” என கூறி சாவர்க்கரை கிண்டல் செய்து உரையாடலை முடித்துள்ளார்.

கருணா கோபாலுடைய கோரிக்கைக்கு இணங்க இந்திய மேலாண்மை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோவையும் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பாஜக பிரமுகருக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் ட்விட்டரில் நடந்த வார்த்தைப் போர் – வென்றது யார் ?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்