Aran Sei

பதஞ்சலியின் கொரோனில் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளிக்கவில்லை: நாம் அனைவரும் முட்டாள்கள் – நடிகர் சித்தார்த்

தஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்துக்கு, உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது  என்று பாபா ராம்தேவ் கூறியதை கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் முட்டாள்கள் என, நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக தயாரித்துள்ள கொரோனில் மருந்து, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின் படி, கொரோனா தடுப்பு மருந்து என்ற அங்கீகாரத்தை, மத்திய ஆயுஷ் அமைச்சகம் வழங்கியிருப்பதாக அறிவித்தது.

கடந்த பிப்பிரவரி 19 ஆம் தேதி டெல்லியில், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன், சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் தலைமை தாங்கிய நிகழ்ச்சியில், கொரோனில் மருந்து அறிமுகம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, “உலக சுகாதார அமைப்பின் வழிக்காட்டுதல்களின் படி, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஆயுஷ் பிரிவிலிருந்து, அங்கீகரிக்கப்பட்ட மருந்து என்பதற்கான சான்றிதழை (CPP) கொரோனில் பெற்றுள்ளது.” என்று பதஞ்சலி தனது அறிக்கையில் தெரிவித்தது.

கொரோனா பெயரால் ரூ.241 கோடி குவித்த பாபா ராம்தேவ் – நவநீத கண்ணன்

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கொரோனாவிற்கான ஆயுர்வேத முறையிலான மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய பதஞ்சலி நிறுவனம், கொரோனில் மருந்தை தயாரித்தது. ஜூன் 23 ஆம் தேதி, கொரோனா தொற்றுப் பரவல் உலகம் முழுதும் உச்சத்தில் இருந்தபோது, ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட கொரோனில் மருந்தை பதஞ்சலி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அறிவியல் பூர்வமாக இம்மருந்து சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்படவில்லை என்று அதற்கு எதிராக அப்போது பலத்த எதிர்ப்புகள் எழுந்தன.

கொரோனாவிற்கு எதிராக பதாஞ்சலியின் கொரோனில் மருந்து – அங்கீகாரம் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்

இதையடுத்து, கொரோனில் மருந்தை, ‘எதிர்ப்புச் சக்தியைக் கூட்டும்’ மருந்து மட்டும்தான் என்று, ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது.

இயற்கை முறையிலான மருத்துவத்தின் அடிப்படையில் நியாயமான விலையில் இந்த சிகிச்சையை வழங்குவதன் மூலம், கொரோனில் மனிதகுலத்திற்கே உதவியாக இருக்கும் என்று பாபா ராம்தேவ் கூறினார்.

பதஞ்சலி கொரோனில் தடுப்பு மருந்து : நாங்கள் அங்கீகாரம் கொடுக்கவில்லை – உலக சுகாதார அமைப்பு

 

கொரோனில் மருந்தின் நம்பகத்தன்மையை பலர் கேள்வியெழுப்பிய போதிலும், உலக சுகாதார அமைப்பே தற்போது அங்கீகாரம் அளித்துள்ளதாக கூறியிருந்த பாபா ராம்தேவ், உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த குழு ஒன்று, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தை ஆய்வு செய்து, கொரோனில் மருந்தை 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் உரிமத்தை வழங்கியதாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து, ”பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் மருந்தை தாங்கள் ஆய்வு செய்யவோ அங்கீகாரம் கொடுக்கவோ இல்லை” என பிப்ரவரி 19ஆம் தேதி, உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

மயக்க மருந்தே இல்லாத ஆயுர்வேத முறையில் அறுவை சிகிச்சை சாத்தியமா?

இதற்கிடையில், கொரோனில் அங்கீகரிக்கப்பட்ட மருந்து எனும் சான்றிதழ், இந்திய அரசின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஆயுஷ் பிரிவினால் வழங்கப்பட்டுள்ளது என்றும், உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது அல்லது பரிந்துரைக்கப்பட்டது என் கூற்று தவறானது என்ற செய்தியை ஆல்ட்  நியூஸ் கண்டறிந்தது.

இந்நிலையில், ஆல்ட் நியூஸ்-ல் வெளியாகியுள்ள இந்த செய்தியை, தன்னுடையை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சித்தார்த், ”பாபா ராம்தேவ் பின்னால் இருக்கும் பதாகை, கொரோனில் பாம்பு எண்ணெய்க்கு (Snake Oil) உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளதாக கூறுகிறது. பாபா ராம்தேவ் அருகில் அமர்ந்திருப்பவர் இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர். அவர்களின் முன்னால் இருக்கும் மக்களாகிய நாம் தான், இந்தியாவின் முட்டாள்கள்” என தெரிவித்துள்ளார்.

பதஞ்சலியின் கொரோனில் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளிக்கவில்லை: நாம் அனைவரும் முட்டாள்கள் – நடிகர் சித்தார்த்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்