சிறுபான்மையினரின் நிறுவனங்களும் ஹிஜாப் அணிவது தொடர்பான விதிகளை பின்பற்ற வேண்டும் என வக்ஃப் வாரியம் அனுப்பிய சுற்றறிக்கையை கர்நாடக மாநில அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள காங்கிரஸ் கட்சி, இச்செயல் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது என்று குற்றஞ்சாட்டியுள்ளது.
நேற்று(பிப்பிரவரி 18), கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருடன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, “உயர் நீதிமன்றத்தின் இவ்வுத்தரவானது கல்லூரி மேம்பாட்டுக் குழு (சிடிசி) பரிந்துரைத்துள்ள சீருடைகளை ஏற்றுக்கொண்ட கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அனைத்து கல்லூரிகளும் அதன் வரம்பிற்குள் வராது” என்று கூறியுள்ளார்.
மதுரை: ஹிஜாபுக்கு எதிப்பு தெரிவித்த பாஜக பூத் ஏஜெண்ட் – பூத் ஏஜெண்ட்டை வெளியேற்றிய பொதுமக்கள்
“வக்ஃப் வாரியத்தால் நடத்தப்படும் உறைவிடப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்று அவ்வாரியம் வழியாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வக்ஃப் வாரியத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் கல்லூரி மேம்பாட்டுக் குழுவில் இல்லை. ஆகவே, அதன் சுற்றறிக்கை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுபான்மையினர் குழுவுடன் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை சந்தித்த சித்தராமையா, அச்சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகா: ஆசிரியர்கள் ஹிஜாப் அணிய தடை விதித்த கல்லூரி நிர்வாகம் – ஆங்கிலப் பேராசிரியர் ராஜினாமா
“இந்த விவகாரத்தை நாங்கள் பரிசீலிப்பதாக எங்களுக்கு அவர் உறுதியளித்தார். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு, சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெறுமாறு அவரிடம் வலியுறுத்தினேன்” என்று சித்தராமையா கூறியுள்ளார்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.