Aran Sei

ஹிஜாப் விவகாரம்: இஸ்லாமியப் பெண்களின் கல்வியை பறிக்கும் இந்துத்துவா – சித்தராமையா குற்றச்சாட்டு

ர்நாடக மாநிலத்தில் உள்ள இரண்டு கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு வகுப்பிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து பேசியுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா, இஸ்லாமிய பெண்களின் கல்வியைப் பறிப்பதே இதன் நோக்கம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று(பிப்பிரவரி 4), பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள சித்தராமையா, “மாணவிகளின் கல்வியை பறிக்கும் திட்டம் இது. பெண் குழந்தைகளின் கல்வியை பறிப்பதே இதன் நோக்கம்” என்று கூறியுள்ளார்.

‘ஹிஜாப் அணிந்த எங்களை வகுப்புக்கு அனுமதியுங்கள்’- கல்லூரி முதல்வரிடம் உரிமை கோரும் இஸ்லாமிய மாணவிகள்

கல்லூரியில் ஹிஜாப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாணவர்கள் காவி துண்டை அணிவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “சில நாட்களாகதான் காவி துண்டு அணிவது நடைமுறையில் உள்ளது. ஆனால், ஹிஜாப் அணிவது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“தேர்தல் வரும்போது இதுபோன்ற விவகாரங்கள் முன்னிலைப் படுத்தப்படுகின்றன. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்த விவகாரத்தை சட்டப்பேரவையில் எழுப்பும்” என்று சித்தராமையா கூறியுள்ளார்.

Source: ANI

ஹிஜாப் விவகாரம்: இஸ்லாமியப் பெண்களின் கல்வியை பறிக்கும் இந்துத்துவா – சித்தராமையா குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்