கோவை மாநகரில் பாஜக கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவிப்பது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சி என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து இளைஞர் ஒருவர் பலியான வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். குற்றம் நிகழ்ந்த 24 மணி நேரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் 5 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த வாரம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் என்.ஐ.ஏ. காவல் நிலையம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறது. அதில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு முதல் வழக்காகப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து தமிழகக் காவல்துறையின் பாரபட்சமற்ற நடவடிக்கையை அனைவரும் பாராட்டுகிறார்கள். தமிழக அரசும் தேசிய புலனாய்வு முகமையிடம் இந்தவழக்கை ஒப்படைத்து இருக்கிறது.
அனைத்து நடவடிக்கைகளும் சரியாக எடுக்கிற நேரத்தில் வருகிற 31-ந் தேதி கோவை மாநகரில் கடையடைப்பு நடத்துவதாக பாஜக அறிவிப்பது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாகும். பாஜகவின் இத்தகைய போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
ஆட்டுக்குட்டியின் குரங்குச் சேட்டை | குட்டி கரணம் அடிக்கும் சங்கிகள் | Aransei Roast | AnnamalaiBJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.