Aran Sei

ஞானவாபி மசூதி: சிவலிங்கம் இருப்பதாக கூறி குளத்தை மூடுவது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் – அகில இந்திய இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியம்

Credit: The Telegraph India

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக கூறி குளத்தை மூட உத்தரவிட்டிருப்பது நியாயமற்றது மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சி என்று அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

மசூதியின் வெளிப்புற சுற்றுச்சுவரில் இந்து கடவுளின் உருவம் இருப்பதால், வழிபட உரிமைக் கோரி ஐந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம். மசூதியை ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்த குழு ஒன்றை நியமித்திருந்தது.

ஞானவாபி மசூதி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? – ஒவைசி கேள்வி

மூன்று நாள் ஆய்வு பணிகள் நேற்று (மே 16) முடிவடைந்த நிலையில், ஆய்வின் போது மசூதி வளாகத்திள் உள்ளே இருக்கும் சிறிய நீர்தேக்கத்தின் (வஸூக்கானா) அருகில் சிவலிங்கம் காணப்பட்டது என்று அந்த குழு தெரிவித்துள்ளது. அதனை ஏற்ற நீதிமன்றம் அங்கு யாரும் செல்ல முடியாதபடி அந்த பகுதியை சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது.

சிவலிங்கம் காணப்பட்டது என்ற கூற்றை மறுக்கும் மசூதியின் நிர்வாகக் குழுவின் செய்தித் தொடர்பாளர், “சிவலிங்கம் என்று கூறப்படுவது நீருற்றின் ஒரு பகுதி என்று தெரிவித்துள்ளார். சீல் வைக்கும் உத்தரவை பிறப்பிக்கும் முன்ன மசூதி நிர்வாகத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரின் வாதத்தை முழுமையாக கேட்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

வாரணாசி: ஞானவாபி மசூதியில் களஆய்வு நடத்த தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

இது தொடர்பாக அகில இந்திய இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச்  செயலாளர்  காலித் சைபுல்லா ரஹ்மானி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஞானவாபி ஒரு மசூதி, அது மசூதியாகவே இருக்கும். அதைக் கோவில் என்று சொல்வது, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கு முயற்சியே தவிர வேறில்லை. இது அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் சட்டத்திற்கு எதிரானது” என்று கூறியுள்ளார். 

1937 ஆண்டு ஒரு வழக்கில் வாய்மொழி சாட்சியம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், மசூதியின் முழு வளாகமும் இஸ்லாமிய வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானது. அதில், தொழுகை நடத்த இஸ்லாமியர்களுக்கு உரிமை உண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

வாரணாசி: காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள மசூதியில் நீதிமன்ற குழு ஆய்வு

மசூதியின் பரப்பளவு, கோயில் பரப்பளவு என்ன என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்தது. மேலும், மசூதியின் சொத்தாக வஸூகானா ஏற்றுக் கொள்ளப்பட்டது. என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 1991 ஆண்டு நிறைவேற்றப்பட்ட வழிப்பாட்டுத் தலங்கள் சட்டத்தின்படி 1947 ஆண்டில் இருக்கும் நிலையிலேயே வழிப்பாட்டுத் தலங்களை பராமரிக்க வேண்டும். அதன் அடிப்படையில் மசூதியை கோவில் என்று உரிமை கோருவது சட்டத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.

வழிபாட்டுத் தலத்தின் நிலையை மாற்ற முயற்சிப்பது மோதலுக்கு வழிவகுக்கும் – ப. சிதம்பரம் கருத்து

“இந்த உத்தரவு மிகையானது மற்றும் சட்டத்தை மீறுவதாகும், இது நீதிமன்றத்திடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. இந்த உத்தரவை அமல்படுத்துவதை அரசாங்கம் நிறுத்திவிட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும். 1991 சட்டத்தின்படி அனைத்து மத ஸ்தலங்களையும் அரசு பாதுகாக்க வேண்டும். “ என்று அவர் கூறியுள்ளார்.

இதுபோன்ற வாதங்களின் அடிப்படையில் வழிபாட்டுத் தலங்களின் நிலையை மாற்றினால், நாடு முழுவதும் கொந்தளிப்புக்குத் தள்ளப்படும், ஏனெனில் பல பெரிய கோயில்கள் மாற்றப்பட்டு உருவாக்கப்பட்டன. பௌத்த மற்றும் ஜைன ஆலயங்களும் அவற்றின் தடயங்களும் அங்கு காணப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

“இந்த கொடுமையை இஸ்லாமியர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் இந்த அநீதிக்கு எதிராக ஒவ்வொரு நிலையிலும் போராடும்,” என்று காலித் சைபுல்லா ரஹ்மானி கூறியுள்ளார். 

Source: The Telegraph India

சட்டத்தை காலில் போட்டு மிதிக்கும் Sangh Parivar கும்பல் Gyanvapi Masjid |Varanasi | Shivling in Pond

ஞானவாபி மசூதி: சிவலிங்கம் இருப்பதாக கூறி குளத்தை மூடுவது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் – அகில இந்திய இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்