Aran Sei

தீஷா ரவி “ஜோசப்” என பரப்பியவர்கள் மதவெறி பிடித்த இந்துத்துவவாதிகள் – சசி தரூர் கடும் கண்டனம்

”தீஷா ரவி, கிறிஸ்துவர் என மதவெறிப் பிடித்த மனநலம் குன்றிய இந்துத்துவவாதிகள் பரப்பி வருகின்றனர்” என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

ஸ்வீடனைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பெர்க், இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு வழிகாட்டும், “டூல்-கிட்” (வழிகாட்டு ஆவணம்) ஒன்றை பகிர்ந்திருந்தது தொடர்பாக, அவர் மீது டெல்லி காவல்துறை தேசவிரோத வழக்கை பதிவு செய்தது.

கிரெட்ட பகிர்ந்த அந்த டூல் கிட்டை திருத்தி வெளியிட்ட காரணத்திற்காக, 22 வயது சூழலியல் செயல்பாட்டாளர் தீஷா ரவி, டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பான ட்விட் – சசி தரூர் கைதுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம்

தீஷா ரவியின் கைதுக்கு அரசியல் தலைவர்கள், எதிர்கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள் என, பலரும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

40 ராணுவ வீரர்களின் மரணத்தை கொண்டாடும் ’தேசியவாதி’ – அர்னாப்பை கிண்டல் செய்த சசி தரூர்

இந்நிலையில்,  நேற்று (பிப்ரவரி 17) தொடங்கி, தீஷா ரவியின் முழுப்பெயர், தீஷா ரவி ஜோசப் எனவும், அவர் கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்துவர் எனவும், ட்விட்டரில் பலர் பதிவு செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, ‘தீஷா ரவி ஜோசப்’ (#disharavijospeh) என்ற ஹேஷ்டேக் வைரலானது.

இந்நிலையில் தீஷா ரவியின் பெயர் தொடர்பாக பரபரப்பட்ட செய்திகள் போலி என ஆல்ட் நியூஸ் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியை பகிர்ந்துள்ள காங்கிரஸ் தலைவர் சசி தரூர், ”தீஷா ரவி கிறிஸ்துவர் என மதவெறிப் பிடித்த மனநலம் குன்றிய இந்துத்துவவாதிகள் பரப்பி வருகின்றனர்” என்று, தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், “அவர் கிறிஸ்துவராக இருந்தால் என்ன ? இஸ்லாமியர்களைத் தொடர்ந்து தற்போது கிறிஸ்துவர்களும் புதிய இந்தியாவில் தங்களுடைய ஜனநாயக உரிமைகளை இழந்து விட்டார்களா? பாஜகவை பொறுத்தவரை, இந்துக்கள் இல்லாத அனைவருமே தேசவிரோதிகள்” என பதிவிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வழக்குகள்: உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் – மதன் பி.லோக்கூர்

தீஷா ரவி பெயர் சர்ச்சை தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவருடைய வழக்கறிஞர் ”தீஷாவின் மத அடையாளம் ஒரு பொருட்டே அல்ல. அவர் கிறிஸ்துவராக இருந்தால் என்ன? இந்துவாக இருந்தால் என்ன? அவர் ஒரு இயற்கை ஆர்வலர். அவருக்கு அனைத்து சமுதாயங்களிலிருந்தும் நண்பர்கள் உள்ளனர். அவர் லிங்காயத்து குடும்ப பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் அவர் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை. அவருடைய மத பின்புலம் தொடர்பாக விவாதிப்பதே அபத்தமாக உள்ளது. ஆனால் அவரை ஒரு மத அடையாளத்திற்குள் சுருக்கி வெறுப்பை பரப்புவதால் இதை விளக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம்”  என தி நியூஸ் மினிட் இணையதளத்திடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீஷா ரவி “ஜோசப்” என பரப்பியவர்கள் மதவெறி பிடித்த இந்துத்துவவாதிகள் – சசி தரூர் கடும் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்