உத்தரபிரதேச சட்டபேரவை தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராக கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா களமிறங்குவாரா இல்லையா என்பதை அவர்தான் முடிவு செய்வார் என்று ஒன்றிய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவரில் ஒருவரான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
நேற்று (செப்டம்பர் 18), செய்தியாளர்களை சந்தித்து பேசிய சல்மான் குர்ஷித், “கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தலைமையில் உத்தரபிரதேச சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும். ஆனால், முதலமைச்சர் வேட்பாளராக அவர் களமிறங்குவாரா இல்லையா என்பதை அவர்தான் முடிவு செய்வார்.” என்று கூறியுள்ளார்.
‘காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட அனைத்தையும் பாஜக விற்றுவிட்டது’ – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பு குறித்து பேசுகையில், “எங்களிடம் ஏற்கனவே கட்சிக்கான தலைவர் ஒருவர் இருக்கிறார். எனவே, எங்களுக்கு மற்றொரு கட்சி தலைவர் தேவையில்லை. நாங்கள் இவ்விவகாரத்தில் திருப்தியாகவே இருக்கிறோம். காங்கிரஸுக்கு வெளியில் இருப்பவர்கள்தான் திருப்தி அடையவில்லை என்று தெரிகிறது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, நேற்று (செப்டம்பர் 18), காங்கிரஸ் சமூக ஊடகத் துறை, ராகுல் காந்தியைத் தலைவர் ஆக்குவதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. இந்த வார தொடக்கத்தில், மகிளா காங்கிரஸ் டெல்லி கமிட்டியும் இதே போன்ற தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது.
ஆட்சிக்கு வந்தால் கும்பல் கொலைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்படும் – காங்கிரஸ் உறுதி
இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 18), கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர், “சோனியா காந்தியின் தலைமையே நாம் அனைவரும் விரும்பும் தலைமை. பலர் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும் என்று கோரியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்களுக்கு நிரந்தர கட்சித் தலைவர் இல்லை. காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பின் ஆற்றலைப் பெருக்க, காங்கிரஸுக்கு ஒரு நிரந்தர தலைவர் இருக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். சோனியா காந்தி பதவி விலகியபோது ராகுல் காந்தியின் கீழ் ஒரு புதிய தலைமை உருவானதை நாங்கள் பார்த்தோம். ராகுல் காந்தி மீண்டும் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வர விரும்பினால், அது விரைவில் நடைபெற வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
Source: ANI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.