Aran Sei

பொய் பேசுவதற்கு கூச்சம் வேண்டமா ?: ஒட்டுமொத்த இந்தியாவே பாஜகவின் ஏ.டி.எம் ஆக மாறிவிட்டது – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி விமர்சனம்

ட்டுமொத்த இந்தியாவே பாஜகவின் ஏ.டி.எம் ஆக மாறிவிட்டது என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள குமாரசாமி, “ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மண்டியா மக்களை பாஜக பக்கம் இழுக்க முயற்சி செய்துள்ளார். அவரது கட்சியினர் எங்களை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். அதே போல் அமித்ஷாவும் எங்கள் கட்சியை விமர்சித்துள்ளார். ஆனால் மண்டியா மக்களை ஏமாற்ற முடியாது. மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் ஒரு குடும்பம் அரசை ஏ.டி.எம். ஆக பயன்படுத்துவதாக கூறியுள்ளார்.

தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் ரூ.17 கோடியுடன் பேரம் பேசியுள்ளனர் – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி

பேய் வாயில் பகவத் கீதை என்றால் அது இது தான். பொய் பேசுவதற்கு கூச்சம் வேண்டமா?. கர்நாடகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவே பாஜகவின் ஏ.டி.எம். ஆக மாறிவிட்டது. இது பொய்யா?. யாருக்கு எது ஏ.டி.எம். என்பது கர்நாடகாவிற்கு தெரியும். 40 சதவீத கமிஷன் யாருடைய ஏ.டி.எம்.க்கு சென்றது?. கொரோனா காலத்தில் கொள்ளையடித்த பணம் யாருடைய உண்டியலுக்கு சென்றது?. ஆபரேஷன் தாமரைக்கு யாருடைய ஏ.டி.எம்-ல் இருந்து பணம் வந்தது?.

நேற்று தேவராயனதுர்காவில் ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சாவுக்கும், 40 சதவீத கமிஷன் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு அமித்ஷா பதில் கூறுவாரா?. பாஜக என்றால் ஏ.டி.எம்.களின் தேசிய குழு. உண்மை இவ்வாறு இருக்க எங்கள் கட்சியை குறை சொன்னால் அதை யார் நம்புவார்கள்.

‘கர்நாடக அனைத்து மக்களுக்குமானது; பஜ்ரங் தளத்திற்கும் விஎச்பிக்கும் சொந்தமானதல்ல’ – எச்.டி.குமாரசாமி

ராமர் கோவில் கட்டியுள்ளோம் என்கிறீர்கள். இது பாஜகவின் சாதனையா?. இதில் இந்தியர்கள் அனைவரின் காணிக்கை இல்லையா?. நீங்கள் (பாஜக) மட்டுமே பெயர் எடுத்து கொள்ள வேண்டாம். ஒருபுறம் கோவில்களை பாதுகாப்பாக சொல்கிறீர்கள். மற்றொருபுறம் கடவுள்களை வெட்கம் இல்லாமல் அரசியலுக்கு பயன்படுத்துகிறீர்கள். நான் மேற்கொண்டுள்ள பஞ்சரத்னா யாத்திரைக்கு மக்கள் வழங்கும் ஆதரவை கண்டு நீங்கள் பயப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Source : indianexpress

RTI reveals that RBI did not approve Demonetisation | Black money | Supreme Court | Demonetisation

பொய் பேசுவதற்கு கூச்சம் வேண்டமா ?: ஒட்டுமொத்த இந்தியாவே பாஜகவின் ஏ.டி.எம் ஆக மாறிவிட்டது – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்