Aran Sei

‘பீமா கொரேகான் வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்க’ – டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது

ழங்குடியின உரிமை செயற்பாட்டாளர் ஸ்டான் சாமி மரணித்ததைத் தொடர்ந்து பீமா கொரேகான் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி இந்திய மாணவர் சங்கம் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

நேற்று (ஜூலை 6), டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் நடத்த போராட்டத்தில் பங்கேற்ற அம்மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள், போராட்டம் நடத்தியதால் தங்களை  காவல்துறையினர் கைது செய்ததாகவும், லாதிசார்ஜ் செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்திய மாணவர் சங்கத்தின் டெல்லி மாநிலத் தலைவர் சுமித் கட்டாரியா, மாநிலச் செயலாளர் பிரிதிஷ் மேனன் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக கிளைத் தலைவர் மற்றும் டெல்லி மாநிலக் குழு உறுப்பினர் ஆயி கோஷ் மற்றும் அகில இந்திய இணைச் செயலாளர் திப்சிதா தார் உட்பட 25 பேரை காவல்துறையினர் கைது செய்ததாக இந்திய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஸ்டான் சுவாமி மரணம் வேதனை அளிக்கிறது ; இனி ஒரு மனிதனுக்கு நிகழகூடாது – ஸ்டான் சுவாமி மரணத்திற்கு பேரறிவாழனின் தாயார் இரங்கல்

மந்திர் மார்க் காவல் நிலையத்தில் கைது செய்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் இரவு 7:15 மணிக்கு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

“கட்டாரியா, மேனன், கோஷ் மற்றும் தார் ஆகிய நான்கு பேர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம்  பிரிவு 41 அ-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவர்களை காவல்துறை முன் ஆஜராக சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் மீது வழக்கு பதியவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.” என்று போராட்டம் நடத்திய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

“செயற்பாட்டாளர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தொடுத்து, அவர்களை ஒடுங்கி, கைது செய்யும் ஒரு மிருகத்தனமான அரசை நாம் காண்கிறோம். பாஜக அரசு உபா சட்டத்தை கொண்டு மாற்று குரல்களை ஒடுக்கவும், ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களை சிறையில் அடைக்கவும் ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது. பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர் உட்பட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.” என்று இந்திய மாணவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மக்களுக்காக வாழ்வை அர்பணித்த பழங்குடியின உரிமை போராளி ஸ்டான் சாமி – கைது முதல் மரணம் வரை

பீமா கொரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்ட பழங்குடியின உரிமை செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி, மகாராஷ்டிரா மாநிலம் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தனியார் மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் (ஜூலை 5) மதியம் 1.30 மணியளவில் உயிரிழந்தார்.

Source; pti

‘பீமா கொரேகான் வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்க’ – டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்