Aran Sei

கர்நாடக மடாதிபதி மீது பாலியல் புகார்: மாணவிகளுக்கு ஆதரவாக மடம் வழங்கிய விருதை திருப்பி அளித்த பத்திரிகையாளர்

ள்ளி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு வழங்கிய விருது மற்றும் ரொக்கப் பரிசை திருப்பி அளிக்க  மூத்த பத்திரிகையாளரும், பீப்பிள்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் ( People’s Archive of Rural India) நிறுவனர் பி.சாய்நாத் முடிவு செய்துள்ளார்.

கர்நாடகத்தில் பிரபல மடங்களில் ஒன்று சித்ரதுர்காவில் இருக்கும் முருக மடம். இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இந்த மடத்தின் சார்பில் தங்கும் விடுதியுடன் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மடத்தின் பள்ளியில் தங்கி படித்து வந்த 15 மற்றும் 16 வயதுடைய 2 மாணவிகள் மடாதிபதி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக புகார் அளித்தனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மடாதிபதி மீது பாரபட்சமற்ற நடவடிக்கை வேண்டும் – சித்தாராமையா வலியுறுத்தல்

இந்த புகாரின் பேரில் மைசூர் நஜர்பாத் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அக்கமாதேவி, வார்டன் ரஷ்மி, பசவநித்யா, பரமசிவய்யா, வக்கீல் கங்காதரய்யா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது

இந்த பாலியல் வன்கொடுமை வழக்கு சித்ரதுர்கா காவல்துறையினருக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்பட 5 பேர் மீது சித்ரதுர்கா காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

முன்னதாக, சித்ரதுர்காவில் இருக்கும் முருக மடத்தால் மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத்துக்கு 2017ஆம் ஆண்டுக்கான பசவஸ்ரீ விருது  வழங்கி கவுரவிக்கப்பட்டது. ராமன் மகசேசே விருது பெற்ற பி. சாய்நாத் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. பசவஸ்ரீ விருது ரூ.5 லட்சம் மதிப்புடையது. ரொக்கம், சான்றிதழ் மற்றும் விருதுப் பலகை ஆகியவை அடங்கும். பரிசளிப்பு விழா அக்டோபர் 23ஆம் தேதி மடத்தின் வளாகத்தில் உள்ள அனுபவ மண்டபத்தில் நடைபெற்றது.

வெடிகுண்டு தயாரிக்க பயிற்சியளித்து இஸ்லாமியர்கள் மேல் பழி சுமத்தும் ஆர்எஸ்எஸ் – முன்னாள் ஊழியர் குற்றச்சாட்டு

பத்திரிகைத் துறையில் சாய்நாத்தின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்பட்டது. சித்ரதுர்காவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக இருந்து வந்தவர் சிவமூர்த்தி முருகா சரணரு. பாலியல் புகாரில் சிக்கிய இவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் ரூரல் இந்தியாவின் மக்கள் காப்பகத்தின் நிறுவனர்-எடிட்டர் பி.சாய்நாத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:-

சித்ரதுர்கா ஸ்ரீ முருக மடத்தின் மடாதிபதி ஸ்ரீ சிவமூர்த்தி முருகா சாரணன் குறித்து ஊடகங்களில் வெளியாகும் குற்றச்சாட்டுகளால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் இப்போது போக்சோ மற்றும் பிற சட்டங்காளின் கீழ் குழந்தைகளை, குறிப்பாக உயர்நிலைப் பள்ளிப் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். .

குழந்தைகளுக்கு எதிரான எந்த வகையான குற்றங்களையும் கண்டிக்க வார்த்தைகள் இல்லை. 2017-ம் ஆண்டு எனக்கு பசவஸ்ரீ விருதையும், அதில் வந்த ரூ.5 லட்சத்தையும் மடம் கொடுத்தது. இந்நிலையில், அந்த பரிசுத் தொகையை காசோலை மூலம் திருப்பித் தருகிறேன்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கும், நீதிக்கான காரணத்திற்காகவும், பசவஸ்ரீ விருதைத் திருப்பித் தருகிறேன். இந்த வழக்கில் நீதியை நிலைநாட்ட மோசமான சம்பவங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ள மைசூரைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் “ஓடாநாடி” மேற்கொண்ட முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.

தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணையத்திற்கு அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்

சமூக தீமைகளுக்கு எதிரான அவர்களின் பல தசாப்த கால போராட்டம், அவர்களின் விடாமுயற்சியால் விசாரணையை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பான விசாரணையை கர்நாடக அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டும், எக்காரணம் கொண்டும் சமரசம் செய்து கொள்ள அரசு அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்  என்று மூத்த பத்திரிகையாளரும், பீப்பிள்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் நிறுவனர்-எடிட்டருமான பி.சாய்நாத் தெரிவித்துள்ளார்.

RSS pracharak yashwant shinde confession on secret meeting for bjp | chat with haseef | deva

கர்நாடக மடாதிபதி மீது பாலியல் புகார்: மாணவிகளுக்கு ஆதரவாக மடம் வழங்கிய விருதை திருப்பி அளித்த பத்திரிகையாளர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்