லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பாலியல் குற்றங்களை அதிகரிக்கச் செய்து பாலியல் தொழிலை ஊக்குவிப்பதாக மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட 25 வயது இளைஞனின் முன் ஜாமின் மனுவை நிராகரிக்கும்போது பேசிய, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளையின் நீதிபதி சுபோத் அபியங்கர் “லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பாலியல் குற்றங்களை அதிகரிக்கச் செய்து பாலியல் தொழிலை ஊக்குவிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருடன் காதல் வயப்பட்டு 2 வருடங்கள் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். அப்போது அந்தப் பெண் 2 முறை கர்ப்பம் அடைந்த போதிலும், காதலன் வற்புறுத்தலின் பேரில் கருவை கலைத்துள்ளார். இருவருக்கும் இடையேயான “லிவ்-இன்” உறவு முறிந்தபோது, அந்தப் பெண் வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அப்போது அவரது லிவ் – இன் காதலன் அந்த பெண்ணை மிரட்டத் துவங்கியுள்ளார்.
உ.பி.,: இந்து பெண்ணை காதலித்த இஸ்லாமிய இளைஞர் – வீட்டை கொளுத்திய இந்துத்துவாவினர்
தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அந்த பெண்ணின் வருங்கால மாமியாருக்கு வீடியோ அனுப்பியுள்ளார். தனது சாவுக்கு அந்த பெண்ணின் குடும்பத்துடன் தாங்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மிரட்டியதால் பீதியடைந்த மாமியார், திருமணத்தையே ரத்து செய்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் அவருடைய முன்னாள் காதலன் மீது பாலியல் வன்கொடுமை புகாரளித்துள்ளார். குற்றஞ்சாட்டப்பட்ட அவர் முன் ஜாமீன் கோரி மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. லிவ் இன் ரிலேஷன்ஷிப் குறித்துப் பேசிய மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளையின் நீதிபதி சுபோத் அபியங்கர் “சமீபகாலமாக லிவ்-இன் உறவுகளால் இத்தகைய குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு அரசியல் சாசனப் பிரிவு 21 உத்தரவாதம் அளிக்கிறது. இந்த பிரிவின் ஒரு மோசமான எதிர்விளைவு தான் லிவ்-இன் ரிலேஷன்ஷிப். இந்த சட்டப்பிரிவின் மோசமான விளைவால் இந்திய சமூகத்தின் நெறிமுறைகளை மூழ்கடித்து, காம நடத்தையை ஊக்குவித்து பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது” என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளையின் நீதிபதி சுபோத் அபியங்கர் குறிப்பிட்டுள்ளார்.
Source: scroll.in
பாஜக செய்யும் Bulldozer அரசியல்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.