திரிபுராவில் நடைபெற்று வரும் கடந்த 4 ஆண்டு பாஜக ஆட்சியில் 24 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக திரிபுரா சிபிஎம்மின் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மாணிக் சர்க்கார் குற்றம் சாட்டியுள்ளார்.
“கடந்த நான்கு ஆண்டுகளில் கொல்லப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களின் மரணத்திற்கு இதுவரை நீதி கிடைத்தபாடில்லை என்று மாணிக் சர்க்கார் கூறியுள்ளார்.
2018 இல் திரிபுராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த அரசியல் கொலைக் குற்றச்சாட்டுகளை ஆளும் பாஜக – திரிபுரா பழங்குடியின மக்கள் கட்சி கடுமையாக மறுத்திருந்தது.
“திரிபுரா மக்களின் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறவில்லை” என்று பாஜக – திரிபுரா பழங்குடியின மக்கள் கட்சியின் ஆட்சியைத் திரிபுராவின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் விமர்சித்துள்ளார்.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.