Aran Sei

ரூ.5 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார் – அண்ணாமலையை கிண்டலடித்த செந்தில் பாலாஜி

லகில் வெறும் 500 கைக்கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு, 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் விலையுள்ள ரஃபேல் கைக்கடிகாரத்தை வெறும் 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டல் அடித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் கைக்கடிகாரம் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கியது என சமூக வலைத்தளங்களில் சர்ச்சையானது. இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “புதிதாக நான் அணிந்திருக்கும் வாட்ச், சட்டை, கார் போன்ற தனிப்பட்ட பொருள்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். நான் கையில் கட்டியிருக்கும் கைக்கடிகாரம் ரஃபேல் போர் விமானத்தின் பாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது. உலகில் இந்த வகை வாட்ச் 500 மட்டும் தான் உள்ளது. அதனால், என் உடம்பில் உயிர் உள்ள வரை இந்த வாட்ச் என்னிடம் இருக்கும். நம்மை தவிர வேறு யார் அதை வாங்குவார்கள். நம்முடைய நாட்டிற்காக இந்த வாட்ச்சைக் கட்டியுள்ளேன்.

ஈஸ்வரன் கோயிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம் படிக்கும் அண்ணாமலையின் கோமாளித்தனம் – செந்தில்பாலாஜி கிண்டல்

ஏனென்றால் நான் தேசியவாதி. ரஃபேல் நம்முடைய நாட்டிற்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பொக்கிஷம். விமானம் வந்த பிறகு இந்தியா உலக அளவில் பேசப்படுகிறது. இந்த கை கடிகாரத்தில் விமானத்தின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும். மொத்தமுள்ள 500 கைக்கடிகாரங்களில்149-வது வாட்ச்சை நான் கட்டியிருக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து,இந்த கை கடிகார விவகாரம் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவியது. இது தொடர்பாக, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு, 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் விலையுள்ள ரஃபேல் காய் கடிகாரத்தை, வெறும் 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் கமல்ஹாசனையும் கடிக்க பார்க்கிறார் அண்ணாமலை – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால், வெளிநாட்டு கைக்கடிகாரத்தை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி. ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்சம் ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலைதான் வருமா?” எனப் பதிவிட்டிருக்கிறார்.

மேலும், திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ்காந்தி தனது ட்விட்டர் பதிவில், “அண்ணாமலை கட்டியுள்ள கைக்கடிகாரத்தை விலை 8,00,000 மேல்… அதன் நிறுவனம் ஆடம்பர கைக்கடிகாரம் செய்யும் bell and ross என்ற சுவிட்சர்லாந்து நிறுவனம்! அண்ணாமலை இதில் தேசியவாதி என பெருமை கொள்ள எதுவும் இல்லை. அதன் விலையும் குறைவு இல்லை, இதை இவருக்கு யார் பரிசாக கொடுத்தார் என்பது தான் கேள்வி? ராகுல் காந்தி போட்ட டி-ஷர்டையும், நடிகை போட்ட பிகினியையும் வைத்து அரசியல் செய்கிற கட்சி பாஜகதான்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

Baba Roast | Tamils denied RSS agenda of Rajinikanth Baba Failed Miserably | Movie Review |

ரூ.5 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார் – அண்ணாமலையை கிண்டலடித்த செந்தில் பாலாஜி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்