திடீர் ஆய்வுகளுக்கு ஆளில்லா ட்ரோன்களை பயன்படுத்தலாம் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்குப் பதிலளித்த ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ‘பிரதமர் லடாக்கிற்கு ட்ரோன்களை அனுப்பி, நமது பாங்காங் த்சோ ஏரியின் மீது சீனா எவ்வாறு பாலம் கட்டுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்’ என்று கூறினார்.
பாஜக அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையம் வலியுறுத்தல்
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒவைசி, “பிரதமர் மோடி அருணாச்சலப் பிரதேசத்திற்கு ஆளில்லா ட்ரோன்களை அனுப்பி, அங்கு உங்களுடைய சிறந்த நண்பர் ஜி ஜின்பிங் இந்திய மண்ணில் தனது காலனியை உருவாக்கியுள்ளதை பாருங்கள்.
मोदी जी एक ड्रोन अरुणाचल भेज दीजिये, जहाँ आपके जिगरी यार Xi भाई ने भारत की ज़मीन पर अपनी कॉलोनी बना ली है। और एक ड्रोन लद्दाख भी भेजिए और देखिये कि कैसे चीन हमारे पांगोंग त्सो झील पर पुल बना रहा है। ज़रा अपना ड्रोन हॉट स्प्रिंग, देमचोक भी तो भेजिए। https://t.co/n69Riv21Li
— Asaduddin Owaisi (@asadowaisi) May 27, 2022
மேலும், லடாக்கிற்கு ட்ரோனை அனுப்பி, நமது பாங்காங் த்சோ ஏரியின் மீது சீனா எப்படி பாலம் கட்டுகிறது என்று பாருங்கள். தயவு செய்து உங்கள் ட்ரோனை வெப்ப நீரூற்று, டெம்சோக்கும் அனுப்பவும்” எனத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கப் பணியின் தரத்தை எங்காவது பார்க்க வேண்டும் என்றால், திடீரென ஆளில்லா ட்ரோன்களை அனுப்பி ஆய்வு செய்வதாகவும், எல்லாத் தகவல்களும் தனக்குக் கிடைப்பது யாருக்கும் தெரியாது என்றும் பிரதமர் மோடி கூறியதை அடுத்து ஒவைசி இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
Source: timesnownews
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.