Aran Sei

பீமா கோரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் மின்னஞ்சல்கள் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் – புனே காவல்துறைக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்

Credit: The Wire

பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சமூக ஆர்வலர் ரோனா வில்சன், கவிஞர் வரவர ராவ், டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹனி பாபு ஆகியோரின் மின்னஞ்சல் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதில் புனே காவல்துறைக்கு தொடர்பு இருக்கும் புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்காவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்கர் பரிஷத் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 84 வயதான பழங்குடி உரிமைகள் ஆர்வலரான அருட்தந்தை ஸ்டான் சுவாமி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் காலமானார்.

இந்நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேருடைய மின்னஞ்சல் முகவரிகள் ஹேக் செய்யப்பட்டதற்கும் புனே காவல்துறைக்கும் இடையிலான தொடர்புகளை பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பீமா கோரேகான் வழக்கு – பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக கூறப்படும் மடிக்கணினி ஹேக் செய்யப்பட்டது : புதிய அறிக்கை

”இந்த நபர்களை கைது செய்தவர்களுக்கும் ஆதாரங்களை வைத்த நபர்களுக்கும் இடையே ஒரு சாத்தியமான தொடர்பு உள்ளது என்று சென்டினெல் ஒன்னின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான ஜுவான் ஆண்ட்ரெஸ் குரெரோ சாடே தெரிவித்துள்ளார்.

”இது நெறிமுறை ரீதியாக சமரசத்திற்கு அப்பாற்ப்பட்டது. இது இரக்கமற்றது. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம் என்ற நம்பிக்கையில் எங்களால் முடிந்த அளவு தரவுகளை முன்வைக்க நாங்கள் முயற்சிக்கிறோம்” அவர் கூறியுள்ளார்.

பீமா கோரேகான் வழக்கில் புதிய திருப்பம் – கம்ப்யூட்டரை ‘ஹேக்’ செய்து தகவல்களை மாற்றியது அம்பலம்

சென்டினெல்ஒனின் புதிய கண்டுபிடிப்புகள் குறிப்பாக புனே காவல்துறையை ”மாற்றியமைக்கப்பட்ட யானை” என்று அழைக்கப்படும் நீண்டகால ஹேக்கிங் பிரச்சாரத்துடன் இணைக்கின்றன. வில்சனுக்கு அனுப்பப்பட்ட 100க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை ஆய்வு செய்தபின்னர், அவர்மீதான ஆரம்பகால தாக்குதல் 2012 ஆண்டில் இருந்து தொடங்கியதாக செண்டினெல்ஒன் கண்டறிந்துள்ளது.

2012 ஆண்டு தொடங்கப்பட்ட தாக்குதல்கல் 2014 ஆம் ஆண்டில் தீவிரமடைந்து, குறைந்தபட்சம் 2016 வரை ஆக்ரோஷமாக இருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்கர் பரிசத்  நிகழ்வுக்கும் கலவரத்திற்கும் தொடர்பில்லை – வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்

ஹேக் செய்யப்பட்ட மின்னஞ்சல் கணக்குகளின் மீட்பு மின்னஞ்சல், தொலைபேசி எண் ஆகியவை பீமா கோரேகான் வழக்கில் தொடர்புடையை புனே காவல்துறை அதிகாரிக்குச் சொந்தமானது. மின்னஞ்சல் கணக்கு மற்றும் தொலை பேசி எண், புனே காவல்துறை அதிகாரிக்கு சொந்தமானது என்பதை உறுதிப்படுத்த இணைய கண்காணிப்பு நிறுவனமான சிட்டிசன் லேப் மற்றும் பிற நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் ஒத்துழைத்தனர்” என்று செண்டினெல்ஒன் தெரிவித்துள்ளது.

”மீட்பு மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண், புனே பாதுகாப்பு அதிகாரிக்குச் சொந்தமானது என்பதை ட்ரூகாலர் செயலி மற்றும் ஆட்சேர்ப்பு இணையதளமான ஐஐஎம்ஜாப்ஸ்.காமில் இருந்து கசிந்த தகவல்களை வைத்து இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஜெஷான் அஜீஸ் கண்டறிந்தார்” என்று செண்டினெல்ஒன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனத்தின் தகவல்களை ஏற்றுக் கொள்ள கூடாது: ரோனா வில்சன் வழக்கில் நீதிமன்றத்தில் என்ஐஏ தாக்கல் செய்த மனு

”ஹேக் செய்யப்பட்ட கணக்குடனான மீட்பு மின்னஞ்சலின் வாட்சப் சுயவிவரத்தில் காவல்துறை அதிகாரியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதே அதிகாரி காவல்துறையினரின் செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் வரவர ராவ் கைது செய்யப்பட்டபோது வெளியான செய்திகளில் இடம்பெற்றிருந்தார் என்பதை ஸ்காட் – ரெயில்டன் (சிட்டிசன் ஆய்வகம்) கண்டறிந்தார்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரோனா வில்சன் விஷயத்தில், அவரது மின்னஞ்சலுக்கு 2018 ஆம் ஆண்டு அனுப்பட்ட ஒரு மின்னஞ்சலைக் கொண்டு அது ஹேக் செய்யப்பட்டது என்றும், இந்த நேரத்தில் புனே அதிகாரியின் மின்னஞ்சல் மற்றும் செல்போன் எண் அதனுடன் இணைக்கப்பட்டது என்று செண்டில் ஒன்னுடன் தொடர்புடைய பகுப்பாய்வாளர் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: The Wire

பீமா கோரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் மின்னஞ்சல்கள் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் – புனே காவல்துறைக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்