2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம், எமர்ஜென்சி காலகட்டம், பனிப்போர் காலகட்டம், நக்சலைட் இயக்கம் மற்றும் முகலாய நீதிமன்றங்கள்பற்றிய பகுதிகளை 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களிலிருந்து தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் (என்.சி.இ.ஆர்.டி) நீக்கியுள்ளது.
இந்தாண்டு தொடக்கத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை ஏப்ரல் மாதத்தில் மாற்றியமைத்தபொழுது மேற்கண்ட இந்த மாற்றங்களில் பல அறிவிக்கப்பட்டன. சிபிஎஸ்இயின் கீழ் உள்ள பள்ளிகளைத் தவிர, சில மாநில கல்வி வாரியங்களும் என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களைப் பயன்படுத்துகின்றன.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள ‘குஜராத் கலவரங்கள்’ என்ற பாடம் நீக்கப்படுவதோடு, 2002 குஜராத் கலவரம்குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை மற்றும் அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் “ராஜ் தர்மம்” கருத்து ஆகியவை பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் உள்ள முகலாய நீதிமன்றங்கள்பற்றிய அத்தியாயங்கள், தலித் இயக்கம்பற்றிய ஒரு கவிதை, பனிப்போர் காலகட்டம் பற்றிய ஒரு அத்தியாயம் ஆகியவை அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும், ‘ஜனநாயகமும் பன்முகத்தன்மையும்’, ‘மக்கள் போராட்டமும் இயக்கங்களும்’ மற்றும் ‘ஜனநாயகத்திற்கான சவால்கள்’ ஆகிய அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளன.
ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளின் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் தலித் எழுத்தாளர் ஓம்பிரகாஷ் வால்மீகி பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன.
Source : The Hindu
இந்திய இளைஞர்களை கூலிப்படையாக மாற்றும் Agnipath | Maruthaiyan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.