Aran Sei

ம.பி: தர்காவிற்குள் அனுமன் சிலை வைக்க முயற்சி – கல்வீச்சு, தீவைப்பு சம்பவங்கள் காரணமாக 144 தடை உத்தரவு

Credit: The Wire

த்திய பிரதேசத்தின் நீமுச் பகுதியில் (மே 16), உள்ள தர்காவிற்குள் அனுமன் சிலையை வைக்க முயன்றதால், வன்முறை ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வன்முறையின்போது நடைபெற்ற கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவங்களால், தர்காவில் இருந்த மோட்டார் வாகனம் மற்றும் குளிர்சாதனபெட்டி சேதமடைந்தது.

புரனி கச்சாஹாரி பகுதியில் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில், நூற்றாண்டு கால பழமையான தர்கா அமைந்துள்ளது.

நீமுச்சின் கோர்ட் மொஹல்லா பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் அந்த கும்பலால் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கார்கோன் ராமநவமி கலவரம் – மாவட்ட ஆட்சியரையும் காவல்துறை கண்காணிப்பாளரையும் இடமாற்றம் செய்த ம.பி., அரசு

வன்முறையின்போது 23 வயதான யூனுஸ் என்ற இளைஞரும் ஒரு காவல்துறை அதிகாரியும் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக 9 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கல்வீச்சு சம்பவத்திற்கு  முன்பாக இரு தரப்பிற்கு இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக காவல் கண்காணிப்பாளர் சூரஜ் வர்மா தெரிவித்துள்ளார்.

நீமுச் நகர காவல் எல்லைப்பட்ட பகுதியில் உள்ள தர்காவில் அனுமன் சிலையை வைக்க ஒரு கும்பல் முயன்றது. இதனால், அங்குக் கூடியிருந்த இரண்டு கும்பலுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

ம.பி: ரம்ஜான் பண்டிகையின் போது ஊரடங்கு தளர்வு – கார்கோன் மாவட்ட நிர்வாகம் உத்தரவு

சம்பவம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினரும் காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். ஆனால், மாறாக அவர்கள் கல்வீசி தாக்குவது, மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நீமுச் நகர காவல்துறை தானாக முன்வந்து 4 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது. மேலும்,  9 பேர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று சுரஜ் வர்மா கூறியுள்ளார்.

மேலும், அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

ம.பி.,கார்கோன் ராமநவமி வன்முறை: 177 பேரைக் கைது செய்துள்ள காவல்துறை

கடந்த ஆண்டு நீமுச் மாவட்டத்தில், சட்டவிரோதமாக மதமாற்றம் செய்யப்படுவதாக கூறி ஒரு வழிபாட்டு தலத்தை 20 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் சேதப்படுத்தியது. அதன் பராமரிப்பாளர் உள்ளிட்ட 3 பேரைக் கட்டி வைத்து அந்த கும்பல் தாக்கியது.

முன்னதாக, கடந்த மாதம் மத்திய பிரதேசத்தின் பல பகுதிகளில், ராமநவமி ஊர்வலத்தின்போது வகுப்புவாத கலவரங்கள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கார்கோனில் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான கட்டடங்களை மாவட்ட நிர்வாகம் புல்டோசர் வைத்து இடித்தது.

Source: The Wire

பாஜகவை திமுக மிகச் சரியாக எதிர்க்கிறது Jenram Interview | Annamalai | Mk Stalin| Venkaiah Naidu| BJP

ம.பி: தர்காவிற்குள் அனுமன் சிலை வைக்க முயற்சி – கல்வீச்சு, தீவைப்பு சம்பவங்கள் காரணமாக 144 தடை உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்