அறிவியல் வளர்ந்து விட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் தண்டோரா போடுவது இன்னும் தொடர வேண்டியது தேவையில்லை என தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், “மக்களிடம் முக்கிய செய்திகளை விரைவாக சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும், அதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன்.
அறிவியல் வளர்ந்து விட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் தண்டோரா போடுவது இன்னும் தொடர வேண்டியது தேவையில்லை. ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் வர செய்வதன் மூலம் மூலைமுடுக்கெல்லாம் தகவல்களை கொண்டு சேர்த்திட இயலும்.
எனவே தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவ பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என்று தமிழ்நாடு தலைமை\ச் செயலர் இறையன்பு குறிப்பிட்டுள்ளார்.
கனல் கண்ணா பெரியார் சிலையை தொட்டு பாரு I Viduthalai Arasu Interview I Periyar I Stunt Kanal Kannan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.