Aran Sei

‘இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக்க கொலையும் செய்வோம்’ – உ.பி. பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

ரித்வார் மாநிலத்தில் நடந்த இந்துத்துவ அமைப்புகள் நடத்திய தர்ம சன்சத் நிகழ்ச்சியில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாக வெறுப்புப் பேச்சுக்கள் பேசப்பட்டது கண்டனத்தை கிளப்பியுள்ள நிலையில், சுதர்சன் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பேச்சு பொருளாகியுள்ளது.

அக்காணொளியை அத்தொலைக்காட்சியின் ஆசிரியர் சுரேஷ் சாவாங்கேயும் மறுப்பகிர்வு செய்துள்ளார்.

அக்காணொளியில், உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ராத்தைச் சேர்ந்தவர்களென கூறப்படும் பள்ளி மாணவர்கள், இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக்க உறுதிமொழி எடுப்பதாக காட்டப்பட்டுள்ளது.

அக்காணொளியில், சிவப்பு நிற சீருடையில் நிற்கும் மாணவர்களும் சில குழந்தைகளும், “இந்தியாவை இந்து நாடாக ஆக்குவதற்கு போராடி, சாக வேண்டும். தேவைப்பட்டால் கொலையும் செய்வோம்” என்று மீண்டும் மீண்டும் உறுதிமொழி எடுக்கிறார்கள்.

இச்சம்பவத்தின் உண்மைத்தன்மையை ஆராய, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் முயன்றபோது, எந்த மாவட்ட அதிகாரியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று  அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. காணொளியின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் அதன்பிறகு நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

Source: New Indian Express 

‘இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக்க கொலையும் செய்வோம்’ – உ.பி. பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்